மெயின் அவுர் மிஸ்டர் ரைட் சினிமா விமர்சனம்

டிவி நடிகர் பருண் சோப்தி, சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, வௌிவந்திருக்கும் படம் மெயின் அவுர் மிஸ்டர் ரைட். அறிமுக
ஹீரோவுக்கு இந்தப்படம் எப்படி அமைந்துள்ளது என்று இனி பார்ப்போம்...

படத்தில் கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. ஆலியா எனும் செனாஜ் டிரசரிவாலா, பாலிவுட்டில் நடிக்க ஆள் பிடித்து தரும் ஏஜெண்ட்டாக இருக்கிறார். இவருக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள், அதில் சிலபேர் ஆலியாவை திருமணம் செய்ய விரும்புகிறார்கள், ஆனால் ஆலியாவுக்கோ அமீர்கான் போன்ற ஒருவர் தனக்கு கணவராக வர வேண்டும் என நினைக்கிறார். ஒருநாள் இக்கட்டான சூழலில் சுகி எனும் பருண் சோப்தியை சந்திக்கிறார். சுகியை, ஹிருத்தானாக தனது நண்பர்களிடம் காட்டிக்கொள்கிறார். ஆலியாவுக்கு தான் தேர்ந்தெடுத்த சுகி மிஸ்டர் பெர்பெக்ட்டாக இருந்தாரா, இல்லையா என்பது படத்தின் மீதிக்கதை.
அறிமுக ஹீரோ வருண் சிறப்பாக நடித்திருக்கிறார், ஆனாலும் நல்ல கதை அமையாததால் அவரது நடிப்பு எடுபடவில்லை.

செனாஜ் டிரசரிவாலா நடிப்பு ரசிகர்களை கவரவில்லை, மிகவும் வயதான தோற்றம் உடையவர் போல தோன்றுகிறார். செனாஜ் நடித்த மற்ற நடிகர்களும் பெரிதாக சோபிக்கவில்லை.

படத்திற்கு கதையே பெரிதாக அமையவில்லை, அதனால் வசனம், திரைக்கதை உள்ளிட்ட எல்லோமே சுத்த வேஸ்ட்டாக தெரிகிறது. படத்திற்கு ஆறுதலே கலை இயக்கமும், ஆடை வடிவமைப்பும் தான். வலுவான கதையமைப்பு இல்லாதது, வேண்டுமென்றே திணிக்கப்பட்ட பாடல்கள் என பட மொத்தமும் போராக தெரிகிறது.

மொத்தத்தில், ''மெயின் அவுர் மிஸ்டர் ரைட் - புவர் ரைட்டாக'' தெரிகிறது!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget