லிங்கா ரசிகர்கள் விமர்சனம்

'லிங்கா' படத்தின் வசூலைப் பற்றித்தானே சொல்லக் கூடாது, படத்தில் உள்ள குற்றம் குறைகளை சுட்டிக் காட்டலாமே என வரிந்து
கட்டிக் கொண்டு அப்படிப்பட்ட குறையான காட்சிகளை புட்டு புட்டு வைத்து வருகின்றனர் ரசிகர்கள். படத்தில் அப்படிப்பட்ட சில குறைகள் இருந்ததால் அவற்றுக்குப் பதிலளிக்கும் விதமாகத்தான் படத்தின் இயக்குர் கே.எஸ்.ரவிக்குமார் கடந்த வாரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் படம் பற்றி விரிவாகப் பேசினார். பொதுவாக, யாருமே இப்படி செய்ய மாட்டார்கள். இருந்தாலும், ரவிக்குமார் பெருந்தன்மையுடன் சில குறைகளை ஏற்றுக் கொண்டதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன், அவை ஆரோக்கியமானவைதான், அப்போதுதான் படத்தில் உள்ள குறைகளை நான் நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என்றும் அவர் அப்போது தெரிவித்திருந்தார். படத்தில் ராஜா லிங்கேசுவரன் - ரஜினிகாந்த் , அறிமுகமாகும் டிரெயின் காட்சியில் அவர் பயணிக்கும் போது கையில் ஜோசப் கேம்ப்பெல் எழுதிய 'தி ஹீரோ வித் எ தவுசன்ட் ஃபேசஸ்' என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பார். 'லிங்கா' படத்தின் கதை நடப்பதோ, சுதந்திர காலத்திற்கு முந்தைய கால கட்டம், ஆனால், அந்த புத்தகம் வெளியானதோ 1949ம் ஆண்டு.

அதை உன்னிப்பாகக் கவனித்த சில விவரமான ரசிகர்கள் அவற்றைப் பற்றி சமூக வலைத்தளங்களிலும் கிண்டலடித்தார்கள். அந்த தவறை ஏற்றுக் கொண்ட ரவிக்குமார், அந்தக் காட்சி எடுக்கும் நேரத்தில் ஒரு புத்தகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று புரொடக்ஷன் டிசைனராக சாபு சிரிலிடம் கேட்டோம். அவரும் அந்த புத்தகத்தைக் கொடுத்தார். ஆனால், என்னுடைய உதவி இயக்குனர்கள் அந்தப் புத்தகம் எப்போது வெளிவந்தது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டனர். அந்தச் சமயத்தில் அதைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. படப்பிடிப்பு நடத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அதை அப்படியே விட்டுவிட்டோம். ஆனால், ரசிகர்கள் சரியாகக் கண்டுபிடித்துவிட்டனர் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கால ரசிகர்களா...கொக்கா...உஷாரா இல்லைன்னா...ஃபேஸ்புக்லயும், டிவிட்டர்லயும் கிழித்துத் தொங்க விட்டுவிடுகிறார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget