தகதக தமன்னாவுக்கு நேற்று (டிச 21) 25வது பிறந்த நாள். கால் நூற்றாண்டுகளை கடக்கிறது இந்த கால்முளைத்த தங்கம். 1989ம் ஆண்டு பிறந்த
தமன்னா பாட்டியாவின் அழகு சின்ன வயதிலேயே வசீகரித்தது. படித்து முடித்த உடன் மாடல் உலகம், தமன்னாவை பார்சல் செய்து எடுத்துக் கொண்டு சென்று விட்டது. மேடைகளில் கேட்வாக் போட்டவருக்கு விளம்பர படங்கள் வந்தது. கூடவே பணமும் வந்தது.
2005ம் ஆண்டு சந்த்சா ரோஷன் செரா என்ற இந்திப் படத்தில் அறிமுகம், பாலிவுட்டில் இருந்து டோலிவுட்டுக்கு வந்தார் ஸ்ரீ என்ற படத்தில் நடித்தார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா அப்படியே கேடி படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அழைத்து வந்தார். கேடி படம் போணியாகாதால் தொடர்ந்து பெரிய வாய்ப்பு இல்லை. பாலாஜி சக்திவேலின் கல்லூரி படம் மூலம் கவனம் ஈர்த்தாலும் படம் தோல்வி அடைந்தது. அதனால் தெலுங்கிற்கே யூடேர்ன் அடித்தார்.
படிக்காதவன் படம் அவரை கமர்ஷியல் ஹீரோயினாக உயர்த்தியது. அயன் சம்பளத்தை உயர்த்தியது, பையாவில் கார்த்தியுடன் மழையில் நனைந்த பிறகுதான் கனவு கன்னியானார். தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் பாலிவுட் ஆசை வந்தது. இந்திக்குப் போனவர் ஹிம்மத்வாலா, ஹம்சலகல், எண்டர்டெயின் மெண்ட் என மளமளவென நடித்து ஹாட்ரிக் பிளாப் குடுத்துவிட்டு அப்படியே தென்னிந்தியா திரும்பி விட்டார்.
கேரியரில் டவுனில் கிடந்தவரை அப்பில் தூக்கிவிட்டார் தல. வீரம் படம் அவருக்கு தமிழில் ரீ எண்ட்ரியை கொடுத்தது. தற்போது ராஜேஷ்.எம் இயக்கும் விஎஸ்ஓபி படத்தில் ஆர்யாவுடன் நடிக்கிறார். தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் இந்தியாவின் பெரிய பட்ஜெட் படமான பாகுபாலியில் நடித்து வருகிறார். தன் படத்தில் நடிப்பவர்களின் பிறந்த நாள் வந்தால் ராஜமவுலி அவர்களுக்கு ஏதாவது சிறப்பு செய்வார். அப்படித்தான் தமன்னாவின் பிறந்த நாளில் பாகுபாலி படத்தில் அவர் நடிக்கும் கேரக்டரின் அழகான படத்தை வெளியிட்டிருக்கிறார். தமன்னா இத்தனை அழகாக இதற்கு முன் எந்தப் படத்திலும் காட்சி அளிக்கவில்லை.
தமன்னாவுக்கு வயது 25. அவரது சினிமாவுக்கு வயது 10. ஏற்றமும், இறக்கமாக இருந்து அவரது சினிமா கேரியர். இனி சீரான பாதையில் அவரது கேரியர் பயணிக்கும் என்று நம்பலாம்.

கருத்துரையிடுக