மொபைலில் பிரைவசி பற்றி பயமா

ஐபோன் பயனாளிகளுக்கும் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் அநேக வித்தியாசங்கள் உண்டு எனச் சொல்கிறது கிளவுட் ஸ்டோரேஜின்
நிறுவனமான ஐடிரைவின் சமீபத்திய ஆய்வு. ஐபோன் பயனாளிகளை விட ஆண்ட்ராய்டு பயனாளிகளின் எண்ணிக்கை அதிகமானது எனும் நிலையில் இந்நிறுவனம் இரு தரப்பிலும் 20,000 பயனாளிகளை எடுத்துக்கொண்டு அவர்களின் மொபைல் செயல்பாட்டை ஆய்வுக்கு உட்படுத்தியது. அந்தரங்க விவரங்களைக் காப்பது என வரும்போது ஆண்ட்ராய்டு பயனாளிகளைவிட ஐபோன் பயனாளிகள் அதிக அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு.

இதன் விவரங்கள் சில;

ஆண்ட்ராய்டு பயனாளிகளைவிட ஐபோன் பயனாளிகள் 33 சதவீதம் புகைப்படங்களை பேக் அப் எடுக்கின்றனர். கிளவுட் சேவைகளை என்கிரிப்ட் செய்வதில் ஆண்ட்ராய்டு பயனாளிகளைவிட ஐபோன் பயனாளிகள் 25 சதவீதம் கூடுதலாகக் கவனம் செலுத்துகின்றனர். இந்த வேறுபாடு ஒருபுறம் இருந்தாலும் இரு பயனாளிகளிலுமே பிரைவசி பற்றிக் கவலைப்படாதவர்கள் தொடங்கி மிகவும் ஆழமாகக் கவலைப்படுபவர்கள்வரை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget