மடிசார் மாமி சோனியா அகர்வால்

காதல் கொண்டேன் படத்துக்காக தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் சோனியா அகர்வால். அதன்பிறகு 7ஜி ரெயின்போ காலனி, கோவில்,
திருட்டுப்பயலே என பல படங்களில் ஹீரோயினாக நடித்த அவர், டைரக்டர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்டார்.

பின்னர் அவரை விவாகரத்து செய்தபிறகு, ரீ-என்ட்ரியில் வானம் உள்பட சில படங்களில் சிறிய கேரக்டரில் நடித்த சோனியா அகர்வால், ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் மீண்டும் ஹீரோயினாக நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இருப்பினும் பாலக்காட்டு மாதவன் என்ற படத்தில் அப்பட நாயகன் விவேக்கிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அவர்.

இந்த படத்தில் ஒரு மாமி வேடத்தில் மடிசார் கட்டி நடித்திருக்கும் சோனியா அகர்வால், குடும்பப் பொறுப்பை சுமக்கும் வெயிட்டான வேடத்தில் நடித்திருக்கிறாராம். அதனால் இந்த படம் திரைக்கு வரும்போது, தன்னைத்தேடி வெயிட்டான ஹீரோயினி வேடங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறாராம் சோனியா. 32 வயதுக்குப்பிறகும் தனக்கு கதாநாயகி வேடம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு காரணம், தன்னைப்போன்று வயது கொண்ட அனுஷ்கா, த்ரிஷா போன்ற நடிகைகள் இன்னும் ஹீரோயினியாக நடிதது வருவதுதானாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget