ராகவலா லாரன்ஸ் நீண்ட நாட்களாக படமாக்கி வரும் 'முனி 3 - கங்கா' படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
ராகவா லாரன்ஸுக்கு நடுவில் சில நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் போனதால் நின்று போயிருந்த படப்பிடிப்பு தற்போது வேகமாக நடந்து வருகிறதாம். சமீபத்தில் இந்தப் படத்திற்காக டாப்சி தண்ணீருக்குள் நீண்ட நேரம் இருக்க வேண்டிய முக்கியமான காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம். இந்தக் காட்சிக்காக சுமார் ஒன்பது மணி நேரத்திற்கும் மேல் டாப்சி தண்ணீருக்குள் இருந்து நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் பல ஆக்ஷன் காட்சிகளிலும் நடிக்கிறாராம் டாப்சி.
இதுபற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் டாப்சி கூறியிருப்பதாவது, “முனி 3 - கங்கா படத்திற்காகத் தண்ணீருக்கடியில் காட்சி ஒன்றை எடுத்தார்கள். அந்தக் காட்சியை இரண்டு நாட்கள் படமாக்க திட்டமிட்டிருந்தார்கள், ஆனால், நான் ஒரே நாளில் முடித்துவிடலாம் என்று ஆசைப்பட்டேன். அதனால், அந்தக் குறிப்பிட்ட காட்சிக்காக தொடர்ந்து ஒன்பது மணி நேரம் தண்ணீரிலேயே இருக்க வேண்டி இருந்தது. வெளியில் வந்து பார்த்த பிறகுதான் என் சருமம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் காட்சி மிகவும் சிறப்பாக வந்ததால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னுடைய நடிப்பு எனக்குத் திருப்தியாக அமைந்தது,” என்றார். 'வெள்ளாவி' வச்சி வெளுத்த நடிகையை இப்படி தண்ணீரில் நிக்க வச்சி 'வெளுக்க' வச்சிட்டாங்களே...!

கருத்துரையிடுக