ஆண்களின் காதல் வலையில் பெண்கள்

உங்களின் காதலன் உங்கள் மீது உண்மையிலேயே காதலில் இருக்கிறாரா அல்லது வெறும் காதல் குண்டை மட்டும் பயன்படுத்துகிறாரா என்பதை
கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாகும். சரி இப்போது காதலர்கள் இப்போது காதலியை ஏமாற்ற என்னென்ன பொய்களை சொல்வார்கள் என்பதை பார்க்கலாம்.. 

• ஒரு பெண்ணை தன் இழுப்பிற்கு ஒரு ஆண் வளைக்க நினைத்தால், அவன் கூறும் முதல் பொய் இதுவாக தான் இருக்கும். தன் அழகை பற்றி ஒரு ஆண் இப்படி புகழும் போது கண்டிப்பாக அந்த பெண்ணிற்கு ஆனந்தமாக தான் இருக்கும். நான் பெண்களிலேயே நீ தான் சிறந்த அழகி என்பார்கள். ஆனால் இதில் எல்லாம் நீங்கள் மயங்கி விடாதீர்கள்! 

• ஒரு ஆணின் உணர்வுகளை தன்னால் மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது என்பதை ஒரு பெண் அறிந்தால் கண்டிப்பாக அவள் சிறப்பாக உணர்வாள். மயங்கி விடாதீர்கள் பெண்களே! தன் வாழ்க்கையை உங்களிடம் ஒப்படைக்காதவரை, ஒரு ஆணை புரிந்து கொள்வது உங்கள் கடமை கிடையாது. 

• ஆண்கள் கூறும் மிகப்பெரிய பொய் இது. பெண்களுக்கு சிறப்பான ஒரு உணர்வை ஏற்படுத்த ஆண்கள் இப்படி கூறுவார்கள். ஒரு ஆண் உங்கள் மீது பைத்தியமாக இருப்பதையும், உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் என்பதையும் நீங்கள் அறிந்தால், உங்கள் உணர்ச்சிகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, அந்த நபரின் உண்மையான நோக்கத்தை அலசுவது கண்டிப்பாக கஷ்டமான ஒன்றே. 

தங்களின் இறுதியான இன்பத்தை பெறும் வரை, ஆண்கள் பெண்களின் மனதை மேக மூட்டத்துடன் வைத்திடவே விரும்புவார்கள். அதனால் அனைத்து வழிகளிலும் அவர் காதலை சோதித்துப் பாருங்கள் பெண்களே! 

• நீங்கள் ஒரு புத்திசாலியான பெண்ணாக இருந்தால், ஏதோ ஒன்று தவறாக உள்ளதே என்று ஆண்கள் கூறும் இந்த பொய்யை வைத்து கண்டுபிடித்து விடுவீர்கள். ஆனால் இந்த பொய்யால் நீங்கள் மயங்கி விட்டீர்கள் என்றால், காதலின் மீது மிக ஆழமான ஏக்கத்தை நீங்கள் கொண்டிருந்திருக்கிறீர்கள். 

அதேப்போல் இதுவரை பார்த்திருந்த சில உணர்ச்சி ரீதியான தேவைகளையும் கொண்டிருந்திருக்கிறீர்கள் என்பதையே அது உணர்த்தும். காதல் குண்டை பயன்படுத்தும் ஆண்கள் கூறும் மற்றொரு பொய் இது என்பது புரிந்து கொள்ளுங்கள் பெண்களே! இந்த சுயநலமான உலகில், யாரும் யாருக்காகவும் சாவதில்லை. அதனால் அவரிடம் பார்த்து மெதுவாக அணுகவும். 

• இது ஒரு உணர்ச்சி ரீதியான மிரட்டலாகும்; ஆனால் உங்கள் மீதுள்ள காதலால் ஒருவர் உங்களுக்காக சாக கூட தயாராக உள்ளார் என்பது உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தினால், நீங்கள் இன்னும் வளரவில்லை என்று தான் அர்த்தமாகும். நீங்கள் இன்னும் பக்குவமடைய வேண்டும். முதலில் காதல் குண்டை பயன்படுத்தும் அவரின் உளவியலைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு வலை! அவரை நீங்கள் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தால், மீண்டும் ஒரு முறை யோசித்து பாருங்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget