ஐ புத்தம் புது தகவல்கள்

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் எமி ஜாக்சன் நடிக்கும் படத்திற்கு 'ஐ' என்று பெயர் வைக்கப்பட்ட போது, 'ஐ' என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று
தெரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டவர்கள் பலர். ஐ என்ற தலைப்பு குறித்து பலரும் ஆராயத் தொடங்கினார்கள். தமிழ் அகராதிகளில் அருஞ்சொற்பொருள் தெடினார்கள். வழக்கம்போல் ஷங்கர் மௌனம் சாதித்து வந்தார்.

ஐ படத்தின் கதாசிரியர்களான சுபா 'ஐ' என்ற தலைப்புக்கான விளக்கத்தை அதாவது அழகு என்று அர்த்தம் என தங்களின் ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார்கள். ஐ படம் பொங்கலக்கு வெளியாக உள்ளநிலையில் தற்போது ஐ என்ற தலைப்பு ஏன் வைக்கப்பட்டது என்பதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார் இரட்டையர்களில் ஒருவரான சுரேஷ்.

'ஐ' என்ற தலைப்பு எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டது? கதையில் கூனன் ஒரு முக்கியப் பாத்திரம். தலைப்பில் கூன் போட்டு வளைந்த எழுத்துகள் இடம்பெற்றால் நன்றாயிருக்கும் என்று ஷங்கர் விரும்பினார். ஐ, ஜ போன்ற எழுத்துகள் அவருடைய ஸ்க்ரீன் டெஸ்ட்டில் வெற்றிபெற்றன. பல்கலைக்கழக தமிழ் அகராதியில் 'ஐ'யில் துவங்கும் வார்த்தைகளைத் தேடலாம் என்று பார்த்தால் மாபெரும் இன்ப அதிர்ச்சி. 'ஐ' என்ற ஒற்றை எழுத்தே கதைக்கு மிகப்பொருத்தமான பல அர்த்தங்களைத் தந்தது. (முக்கியமாக அழகு!) உடனே போடு டைரக்டருக்கு ஃபோன். அவருக்கும் ஆச்சரியம். இன்னொரு அகராதியிலும் அர்த்தங்களை சரிபார்த்து, உடனே தலைப்பைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்தார்.

'ஐ' பிறந்தது. தை பிறக்கும் முன்பே திரை பார்க்கக்கூடும்..! படத்தின் தலைப்புக்காக ஷங்கர் எப்படி எல்லாம் மெனக்கெட்டிருக்கிறார் பாருங்கள்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget