மராட்டியில் கலக்கும் சின்ன வீடு நாயகி

தமிழில் ஒற்றன் படத்தில் இடம் பெற்ற "சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா" என்ற ஒரு பாடலின் மூலம் பாப்புலர் ஆனவர் தேஜாஸ்ரீ, அதன்
பிறகு ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். கோடம்பாக்கம், கள்வனின் காதலி, நடிகை, படங்கள் முக்கியமானவை, மதுர, அது ஒரு கனா காலம், வீராப்பு, இம்சை அரசன் 23ம் புலிகேசி, நான் அவனில்லை படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். மார்க்கெட் குறையவே மீண்டும் ஒரு பாடலுக்கு ஆட ஆரம்பித்தார். அதன் பிறகும் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்க முடியாமல் சொந்த மாநிலமான மராட்டியத்துக்கு சென்று விட்டார். இப்போது மராட்டிய மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரே நேரத்தில் 5 மராட்டிய படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். என்றபோதும் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற கனவிலும் இருக்கிறார். சமீபத்தில் சென்னை வந்த அவர் பரஞ்சோதி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு கரகாட்டம் ஆடிச் சென்றிருக்கிறார். தொடர்ந்து தமிழ் படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடவும் முடிவு செய்திருக்கிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget