இயற்கை அழகி ஸ்ருதிஹாசன்

நமக்கெல்லாம் அழகு என்றாலே ஒரு அளவு கோலாக இருப்பது நமது மனம் கவர்ந்த நட்சத்திரங்கள் மட்டுமே. முன்பெல்லாம் ஒரு
பெண்ணைப் பார்த்து அழகாக இருக்கிறார் என்று சொல்வதென்றால் 'மகாலட்சுமி' மாதிரி இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால், இன்று நிறைய பேர் அப்படி மங்களகரமாக ஆடை அணிந்து வருவதில்லை. அதனால் நமக்கு அடுத்தவர் அழகை ஒப்பிட்டுப் பேசுவதென்றால் யாராவது ஒரு நடிகையுடன்தான் ஒப்பிட்டுப் பேசுகிறோம். ஒவ்வொரு நடிகைக்குமே அவர்கள் ரொம்ப அழகு என்ற கர்வம் இருக்கும். தற்போது விஜய் பட ஜோடியாக நடிக்கும் ஸ்ருதிஹாசனுக்கு அந்த கர்வம் அதிகமாகவே இருக்கிறது.

சமீபத்தில் அவர் விடுத்த ஒரு ஸ்டேட்மென்ட்டில், “அனைத்து ஹீரோயின்களுமே மேக்கப்பினாலும், ஒளி வெளிச்சத்தாலும் திரையில் அழகாகவே தெரிகிறார்கள். ஆனால், மேக்கப் இல்லாமலே நான் அழகாக இருக்கிறேன். எனது உடல் சரியான அளவுடனும், இயற்கையிலேயே நான் அழகாகவும் இருக்கிறேன் என்றால், அதற்கு என்னுடைய அப்பா, அம்மாதான் காரணம். அவர்களிருவரும் அழகாக இருப்பதால் நானும் அழகாக இருக்கிறேன்,” எனக் கூறியிருக்கிறார்.

ஸ்ருதி இப்படி சொல்லியிருப்பதன் மூலம் மற்ற நடிகைகளையும் லேசாகப் பொறாமைப்பட வைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாகவே ஹிந்தி, தெலுங்குப் படங்களில் மிகவும் கிளாமராக நடிப்பவர், தற்போது விஜய் நடிக்கும் படத்தில் கிளாமராக நடித்து வருகிறாராம். இந்தப் படம் மூலம் தமிழ்த் திரையுலகிலும் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்று சபதம் எடுத்திருக்கிறாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget