ஒண்ணுமே புரியல என்னும் தமிழ்படம் வெளியாகும் முன்னரே ஹாலிவுட்டில், ஆங்கிலத்தில் மற்றும் ஜெர்மன் மொழிகளில்
தயாரிப்பதற்காக ஒரு பிரபல ஜெர்மன் சினிமா நிர்வாகம் பென்செல் அண்ட் ஜானிஷ் பிலிம் புரொடெக்சன்ஸ் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இப்படத்தை, அறிமுக இயக்குனர் அப்சரா ராம்குமார் இயக்கியுள்ளார்.
இப்படத்தை பற்றி அப்சரா ராம்குமார் அவர்களிடம் கேட்ட போது, இது எதிர்பாராத ஒரு மகிழ்ச்சி. எனக்கு மட்டுமின்றி தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்க்கக்கூடிய ஒரு விசயமாக கருதுகிறேன். என்று கூறினார். இந்த படத்தின் கதாநாயகனாக நடித்தது ஜான் மைக்கேல் மற்றும் கதாநாயகிகள் வித்யா மற்றும் ஹரிணி. இந்த படத்தில் ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் சகோதரி ஏ.ஆர்.ரெகானா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் உயிர்நாடி. ஏ.ஆர். ரெஹானாவின் இசை என்று அப்சரா ராம்குமார் கூறியுள்ளார்.
ஒண்ணுமே புரியல என்கிற திரைப்படம் உலக சினிமாவில் ஒரு புத்தம் புதிய படைப்பு என்றும், இது ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் என்றும் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளார். ஒண்ணுமே புரியல திரைப்படத்தை கலிபோர்னியாவில் உள்ள பிரபல ஹாலிவுட் திரைப்பட கம்பெனியுடன் இணைந்து உரிமை பெற்றுள்ள ஜெர்மன் நிறுவனம் இயக்கும் என்றும், இப்படத்தை மேற்கு கலாச்சாரத்திற்கு ஏற்றபடி மாற்றி அமைத்து, ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு ஜெர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் 2016ம் ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒண்ணுமே புரியல திரைப்படம், ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக