பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் பச்சன், முதன்முறையாக முழு ஆக்சன் படத்தில் நடிக்க
உள்ளார். ஜஜ்பா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, சஞ்சய் குப்தா இயக்குகிறார். இதுகுறித்து, இயக்குனர் சஞ்சய் குப்தா டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, ஜஜ்பா படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சூட்டிங் நாள் நெருங்க, நெருங்க, மனதில் புது உத்வேகம் பிறக்கிறது. ஜஜ்பா படம், ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ள முழு ஆக்சன் படம் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். 19 ஆண்டுகளுக்கு பிறகு, ஐஸ்வர்யா ராய், அனுபம் கேர் உடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.ஐஸ்வர்யா ராய் பச்சன், இர்பான் கான், அனுபம் கேர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

கருத்துரையிடுக