தேசிய விருதுபெற்ற மலையாள இயக்குனர் பத்மராஜிடம் உதவியாளராக இருந்த கே.என்.பைஜு தற்போது இயக்கி வரும் படம்
யாரோ ஒருவன். ராம், ஆதிரா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் பெரும்பகுதி காட்சிகள் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காட்டுக்குள் படமாக்கப்பட்டது. காணாமல் போன தன் மனைவியை தேடி காட்டுக்குள் செல்லும் ஒருவன் அங்கு சந்திக்கும் வித்தியாசமான அனுபவங்கள்தான் படம். அவருடன் துப்பறிவாளர் ஒருவரும் உடன் செல்கிறார். பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டு பெண்கள் சிலரையும் உடன் அழைத்துச் செல்கிறார். இதில் வெளிநாட்டைச் சேர்ந்த ஓரியன், சான்ட்ரா, பிஹிமா என்ற வெளிநாட்டு பெண்கள் நடித்திருக்கிறார்கள்.
இவர்களை அடர்ந்த காட்டுக்குள் சென்று படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஹாலிவுட் படங்களில் தலைகாட்டியிருக்கும் இவர்கள் அதேபோன்ற வசதிகள் இங்கு கிடைக்கும் என்று நினைத்து நடிக்க வந்திருக்கிறார்கள். நடுக்காட்டில் நடக்க முடியாது என்று கூறியிருக்கிறார்கள். உடனே நாற்காலியில் கம்பு கட்டி பல்லக்கு மாதிரி செய்து தூக்கிச் சென்றிருக்கிறார்கள். பீட்சா, கிரீன் டீ கேட்டு அடம்பிடித்திருக்கிறார்கள், நல்லவேளையாக ஃபாரின் லேடிகள் கேட்பார்கள் என்ற ஹாட் டிரிங்சை கையோடு கொண்டு சென்றிருக்கிறார்கள். அதைக் கொடுத்து சமாளித்தே படத்தை முடித்து திரும்பியிருக்கிறார்கள். டிசம்பர் 12ந் தேதி அன்று லிங்காவுடன் வெளியிடுகிறார்கள். "லிங்கா படத்துக்கு வருகிறவர்கள் அதற்கு டிக்கெட் கிடைக்காமல்" என் படத்துக்கு வருவார்கள் என்கிறார் படத்தின் இயக்குனர் பைஜூ.

கருத்துரையிடுக