சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அனுஹாசன், இந்திரா, நள தமயந்தி, ரன், அஞ்சாதே உள்பட பல படங்களில் நடித்தவர்.
தற்போது லண்டனில் செட்டிலாகியிருக்கும் அவர், வல்லதேசம் என்றொரு படத்தில் ஆக்சன் ஹீரோயினாக நடிக்கிறார். விஜயசாந்தி நடித்த அதிரடி படங்களைப்போன்று இப்படத்தின் கதை உருவாகியுள்ளதாம்.
அதோடு, லண்டன் தமிழர் ஒருவர்தான் இந்த படத்தை தயாரித்து, இயக்குகிறாராம். கதாநாயகன் இல்லாத இந்த படத்தில் ராணுவத்தில் இருந்து வரும் ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம் அனுஹாசன. நாசர் ராணுவ கேப்டனாக நடித்துள்ளாராம். சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை கண்டு கொந்தளிக்கும் அனுஹாசன். சமூக விரோதிகளை அழிப்பது தான் இந்த படமாம்.
இதற்காக தனது உடல் எடையை கணிசமான அளவு குறைத்த அணுஹாசன், சில மாதங்களாக சண்டை பயிற்சியும் எடுத்து சண்டை காட்சிகளில் கிட்டத்தட்ட விஜயசாந்தி எதிரிகளை பந்தாடியது போன்று பின்னி எடுத்திருக்கிறாராம். இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றபோதும், சென்னையிலும் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
அதையடுத்து, மீண்டும் வல்லதேசம் யூனிட் இறுதிகட்ட பணிகளுக்காக லண்டன் பறந்து விட்டது. இந்த படம் தமிழ்நாடு மற்றும் லண்டனில் மட்டுமே வெளியிப்பட உள்ளதாம். மேலும், இந்த படத்தில் நடிப்பதற்காக மட்டுமே சென்னை வந்த அனுஹாசன், மீண்டும் லண்டனுக்கே சென்று விட்டார். இனி அவர் எப்போதுமே லண்டனில் வாழும் தமிழச்சிதானாம்.

கருத்துரையிடுக