கூகுளின் தானியங்கி கார்

பல வருடங்களாக டிரைவர் இல்லாமல்  தானாக ஓடும் காரை உருவாக்கும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டு வருகிறது. தற்போது இரண்டு பேர்
அமரும் வகையிலான‌ இக்கார் இறுதி வடிவம் பெற்றுள்ளது.  கட்டளையிட்டால் போதும், பயணிகளை அழைத்துக்கொண்டு அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அவர்களைக் கொண்டு சேர்த்து சேவையாற்றும் இந்தக் கார். நுகர்வோருக்கு நெருக்கமான உணர்வைத் தர வேண்டும் என்பதற்காக இந்தக் காரின் முகப்புப் பகுதி மனித முகம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக முன்பகுதியில் கண்ணாடிக்குப் பதிலாக பிளாஸ்டிக் காற்றுத் தடுப்பானே உள்ளது. இப்போதைக்கு மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இதைச் செலுத்த முடியும்.

இந்த காரில் ஸ்டியரிங், ஆக்ஸிலேட்டர், பிரேக் என்று எதுவும் இல்லை, ஏனென்றால் இது எதுவும் இதற்குத் தேவையில்லை. எங்களது மென்பொருள் மற்றும் சென்சார்களே எல்லா வேலையையும் கவனித்து கொள்ளும்” என்று கூகுள் நிறுவனத்தின் கிரிஸ் உம்சன் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.வரும் புத்தாண்டன்று விடுமுறை தினத்தில் எங்கள் காரின் சோதனை ஓட்டம் நடக்கிறது. வடக்கு கலிபோர்னியாவில் உள்ள வீதிகளில் நடைபெற உள்ள சோதனை ஓட்டத்தில் உங்களை சந்திக்க விரும்புகிறோம்” என்று இந்த தானியங்கி காரை வடிவமைத்த குழுவினர் தங்களின் சமூக வலைதளத்தில் அழைப்பு விடுத்துள்ளனர். இந்தக் காரைப் போக்குவரத்துச் சாலைகளில் சோதிப்பதற்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா, நிவாடா ஆகிய மாகாணங்கள் மட்டுமே சட்ட ஒப்புதலைத் தந்துள்ளன. ஆனால் போகப்போக அனைத்து மாகாணங்களும் உலக நாடுகளும் ஒப்புதல் தரும் என கூகுள் குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget