வாட்டர் புரூப் ஸ்மார்ட் போன்

தங்களுடைய மொபைல் போன்களை, குறிப்பாகப் பெரிய அளவில் வடிவமைக்கப்படும் ஸ்மார்ட் போன்களைத் தண்ணீரில் தவற விடுபவர்கள்
தற்போது அதிகரித்து வருகின்றனர். நீச்சல் குளங்களில் இறங்குகையில், தங்கள் கால்சட்டை அல்லது சட்டைப் பாக்கெட்டில் வைத்தவாறே இறங்குதல், குளியலறையில் நீர் நிரம்பிய வாளிக்குள் தவறவிடுதல், டாய்லட் தொட்டியில் விழவிடுதல், மழை நீர் தேங்கி இருக்கும் சாலைகளில் தவற விடுதல் என இது பல வகைகளில் உள்ளது. சிலர், இவ்வாறு தவறவிட்டு உடனே எடுக்கப்படும் போன்களை, அரிசியில் 72 மணி நேரம் புதைத்து வைத்து எடுத்தால் சரியாகிவிடும் என்று கூறுகின்றனர். இது எந்த அளவிற்கு சரி என்று இதுவரை யாரும் தங்கள் அனுபவத்தினைத் தெரிவிக்கவில்லை. ஆனால், அதிக நேரம் நீரில் மூழ்கிவிட்டால், ஸ்மார்ட் போன் விலை உயர்ந்த டேபிள் வெய்ட்டாகத்தான் பயன்படுத்த வேண்டியதிருக்கும். 

பல்வேறு நவீன தொழில் நுட்பத்துடன், மொபைல் போன்கள் நாள் தோறும் வந்து கொண்டிருக்கையில், தண்ணீரினால், கெட்டுப் போகாத அல்லது தண்ணீரில் மூழ்கினாலும், செயல்படுகின்ற வாட்டர் புரூப் மொபைல் போன்கள் ஏன் வருவதில்லை. ஒன்றிரண்டு அது போல வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, சோனி எக்ஸ்பீரியா இஸட் 3 மாடலைச் சொல்லலாம். இதற்கான விளம்பரத்தில் கூறியுள்ளபடி, இதனைக் கைகளில் வைத்துக் கொண்டு அடை மழை பெய்திடும் நாளில் ஓடலாம். குளத்தங்கரையில், கைகளில் வைத்தபடியே குதித்து நீரில் மூழ்கலாம். 1.5 மீட்டர் ஆழத்தில் இதனை 30 நிமிடங்கள் மூழ்க வைத்து இயக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற சில மாடல்களும் இது போல தண்ணீரில் நனைந்தாலும் கெட்டுப் போகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டன. ஆனால், மக்கள் அந்த பண்பிற்காகவே அவற்றை வாங்கியதாக இதுவரை நமக்குத் தகவல் இல்லை. எனவே தான் பல நிறுவனங்கள், நீரில் நனைந்தாலும் இயங்கும் மொபைல் போன்களை வடிவமைத்து வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், வேறு சில காரணங்களும் உண்டு. அவற்றை இங்கு காணலாம்.

தயாரிப்பில் தாமதம்: வாட்டர் புரூப் மொபைல் போன்கள் அதிக அளவில் காணப்படாததற்கு, அவற்றைத் தயாரிப்பதில் கால விரயமும், அதற்கான வடிவமைப்பு முறைகள் மிகவும் குழப்பமாக அமைந்திருப்பதுமே. தண்ணீரை சாதனம் ஒன்றில் நுழையவிடாமல் இருக்க nanocoating என்னும் தொழில் நுட்பம் நமக்குக் கை கொடுக்கிறது. ஆனால், இதனைப் பயன்படுத்துகையில், போனுக்குள் செல்லும் மின் சக்தியுடன் இது ஒத்துப் போவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தடுக்கும் வகையில் செயல்படுகிறது.
பயன்படுத்த சிரமம்: வாட்டர் புரூப் மொபைல் போன்கள் அதிகம் பிரபலமாகமல் இருக்கக் காரணம், அவை அதிக எடை கொண்டவையாக அமைவதுதான். மேலும் பயன்படுத்த சற்று சிரமமாகவும் இருக்கும். பொதுவாக, அதிக எடை இல்லாத போன்களையும், மிக குறைவான தடிமன் உடைய போன்களையுமே மக்கள் விரும்புவார்கள். எனவே தான், வாட்டர் புரூப் மொபைல் போன்களை மக்கள் விரும்பவில்லை. மேலும் தடிமன் அதிகமாக அமைக்கப்பட்டால், அவை அழகான தோற்றத்தில் அமைவதில்லை.

புதிய போனுக்கு மாற ஆசை: தண்ணீரில் ஒருமுறைக்கு இருமுறை தங்கள் போன்களைத் தவற விட்டவர்கள், பொதுவாக புதிய போனுக்கு மாறிக் கொள்ளவே விரும்புவார்கள். எனவே தான் வாட்டர் புரூப் தன்மை கொண்ட போன்களை யாரும் விரும்புவதில்லை.

விற்பனை லாபம் குறைவு: வாட்டர் புரூப் மொபைல் போன்களைத் தயாரிக்க முனைந்தால், விற்பனையில் அவை அவ்வளவாக இலாபம் தருவதில்லை. தங்கள் போன்களைச் சார்ந்து இருப்பவர்கள், அவை கெட்டுப் போய்விட்டால், அதற்குப் பதிலாக புதிய போன்களையே ஏற்கனவே வாட்டர் புரூப் போன்களை வாங்கிப் பழகியவர்கள், மீண்டும் அதே மாடல் போன்களையே வாங்கும் பழக்கம் ஏற்பட்டால் தான், நிறுவனங்கள் வாட்டர் புரூப் மாடல் போன்களைத் தயாரித்து வழங்க முன்வருவார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget