நீதானே என் பொன்வசநதம் படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்தவர் காமெடி நடிகை வித்யுலேகா ராமன். அந்த படத்தில் அவரது நடிப்பு
இளவட்டங்களை கவர்ந்ததால், அதையடுத்து, தீயா வேலை செய்யனும் குமாரு, மாலினி 22 பாளையங்கோட்டை, ஜில்லா என பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார் அவர். தற்போதுகூட, காக்கி சட்டை, பஞ்சு மிட்டாய் போன்ற படங்களில் நடித்து வரும் வித்யுலேகா ராமனின், நடிப்பு ஜில்லா படத்தில் சிறப்பாக இருந்ததால் அவரை தனது மாரீசன் படத்தில் ஒரு ரோலில் நடிக்க வைக்குமாறு விஜய்யே சிம்புதேவனிடம் கேட்டுக்கொண்டாராம். அதேபோல் சந்தானம் போன்ற காமெடியன்களும் தாங்கள் நடிக்கும் படங்களில் அவரை பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே மார்க்கெட்டில் இருந்த குண்டு ஆர்த்தி, மதுமிதா போன்ற நடிகைகளின் நடிப்பு பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆகாமல் போனதால், இப்போது டைரக்டர்கள் இவரை நம்புகின்றனர். அதனால்தான் புதிய படங்களில் அவருக்கு அதிகப்படியான காட்சிகளும் கொடுத்திருக்கிறார்களாம். அதனால் தற்போது கைவசமுள்ள படங்கள் திரைக்கு வரும்போது வித்யுலேகா பேசப்படும் காமெடி நடிகையாகி விடுவார் என்கிறார்கள.

கருத்துரையிடுக