தம்பி மனைவியை நான் சைட் அடிப்பேன். அதைப்பார்த்து அவன் என்னை அடிப்பான். ஆனாலும் நான் நிறுத்தமாட்டேன் மறுபடியும்
மறுபடியும் அவளை வர்ணித்துக்கொண்டேயிருப்பேன். அந்த கேரக்டர் என்னை ரொம்பவே பேச வைத்தது எனகிறார் சின்னத்திரை நடிகர் பெரோஸ்கான்.
இப்போது நடித்துக்கொண்டிருககும் சீரியல் பற்றி சொல்லுங்கள்?
என் கேரியரை விஜய் டி.வியில் ஒளிபரப்பான புதுக்கவிதை தொடரில் ஸ்டார்ட் பண்ணினேன். பக்கா வில்லன் ரோல், அப்புறம் மோகினி தொடரில் கெஸ்ட் ரோல். ட்ரை ஆங்கிள் லவ் ஸ்டோரி. ஒரு பெண்ணை காதலிச்சிட்டு இருக்கும்போது இறந்துடுவேன். பிறகு ஆவியா வந்து அந்த பொண்ணு உடம்புக்குள்ள போயிடுவேன். ஏவிஎம்மோட சீரியல் இது. அடுத்து, கெளசல்யா நடிக்கிற அக்கா தொடர்ல நடிக்கிறேன். ஆக, ரெண்டு தொடர்ல நெகட்டிவ் ஆகவும், ஒரு தொடர்ல பாசிட்டிவ் ரோல்லயும நடிக்கிறேன்.
டி.வியில் பெரிய நடிகராக வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கமா?
என் சொந்த ஊர் கோயமுத்தூர். சேல்ஸ் மேனேஜராக வேலை செய்து வந்தேன். அப்போது என் ப்ரண்டு அஜ்மலை வைத்து வெற்றிச்செல்வன் என்ற படத்தை எடுத்தார். அநத படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க அழைத்தார். ஆனால் வேலை பிசியாக இருந்ததால் நடிக்க முடியாம போச்சு. அதனால்தான் வேலையை விட்டுட்டு, சென்னை வந்து முகப்பேரில் ஆக்டிங் கோர்ஸ் படிச்சிட்டு அதுக்கு பிறகு முழுசாக நடிகக இறங்கினேன். சினிமாவுல நடிக்க ட்ரை பண்ணினேன். அப்போதுதான் எனக்கு ஆக்டிங் சொல்லிததந்த குரு என்கிற மாஸ்டருக்கு விஜய் டி.வி சீரியலில் நடிக்க சான்ஸ் வந்தது. ஆனால் அவர் அப்போது சிங்கப்பூர் செல்ல வேண்டியிருந்ததால், எனக்கு சிபாரிசு செய்தார். அதனால் சினிமாவில் நடிக்க ட்ரை பண்ணிக்கொண்டிருந்த நான் சீரியலுககு வநதேன்.
அப்படின்னா சினிமாவில் நடிக்கிறத விட்டுடடீங்களா?
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது கனவே. இப்படி சீரியல்ல மூலமாக என்னோட நடிப்புத்திறமையை வளர்த்துக்கிட்டு வர்றேன். மேலும், சமீபகாலமாக சின்னத்திரையில் இருந்து செல்பவர்களுக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது. சிவகார்த்திகேயன், மாகபா போன்றவர்கள் கதாநாயகர்களாக நடிதது வருகிறார்கள். அதனால் நானும் என் திறமையை நன்றாக வளர்த்துக்கொண்டு சினிமாவில் இறங்குவேன். மேலும் சீரியல்களில் நடிப்பதால் சினிமாவை விட்டு விட மாட்டேன். சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறேன்.
கதாநாயகனாக நடிப்பதுதான் உங்களது திட்டமா?
இல்லை வில்லனாக நடிக்க வேண்டும் என்பதுதான் என்னோட திட்டம். ரகுவரன்தான் எனது பேவரைட் நடிகர். எனது ரோல் மாடல் அவர்தான் அவரும கோவைதான் என்பதினால்தான் அதிகமாக பிடிக்கிறதோ என்னவோ தெரியல. அவரை மாதிரி ஒரு நல்ல வில்லனாக வரவேண்டும் என்று ஆசைபபடுகிறேன்.அவர் நடித்த பாட்ஷா, பீமா உள்பட பல படங்கள் பிடிக்கும். சைலன்டா வில்லத்தனம் பண்ணுவதில் அவரை அடிச்சிக்க முடியாது. அவர் கடைசியாக நடித்த யாரடி நீ மோகினி படம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். வில்லனாக இருந்தாலும் சரி, அப்பாவாக இருந்தாலும் சரி அந்த கதாபாத்திரமாகவே மாறி விடும் ஒரு அருமையான ஆர்ட்டிஸ்ட் ரகுவரன். அவரது ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். அதோடு,. பிரகாஷ்ராஜ் நடிப்பும் பிடிக்கும்.
வில்லனுக்காக எப்படி தயாராகிக்கொண்டிருக்கிறீர்கள்?
எனக்கு இந்த லக், அதிர்ஷ்டம் மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. முயற்சி, உழைப்பைதான் நம்புவேன். அதனால், டி.வி சீரியல்கள் மூலமா நடிப்பில் என்னை தயார்படுத்திக்கொண்டு வரும் அதே நேரத்தில், ஜிம்முக்கு சென்று எனது பாடி லாங்குவேஜையும் மாற்றிக்கொண்டிருக்கிறேன். மேலும், சில குறும் படங்களில் நடிக்கவும் பேசிக்கொண்டிருககிறேன்.
நீங்கள் எந்த மாதிரியான சீரியல்களை ரசிப்பதுண்டு?
நான் நடிக்க வருவதற்கு முன்பு சீரியல்களே பார்த்ததில்லை. எதிர்பாராதவிதமாக சீரியல்களில் நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோதுதான், சில தொடர்களை பார்த்தேன். மேலும், எனக்கு ஒரே மாதிரியான சீரிய்லகளில் நடிப்பதும் பிடிக்காது.அதனால்தான் தற்போது நடிக்கும் மூன்று சீரியல்களிலும் மூன்றுவிதமான கேரக்டர்களில நடித்து வருகிறேன். மேலும், நான் ஒரு அமெச்சூர் ஆர்ட்டிஸ்டுதான். ஆனால், எனக்கு வாய்பபு கொடுத்த டைரக்டர்கள் என்னிடம் நல்லமுறையில் வேலை வாங்குகிறார்கள். அதனாலதான் எனது நடிப்பும் பேசபபட்டு வருகிறது. அதற்கு டைரக்டர்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.
பேய் சீரியலில் நடிக்கிறீர்களே. உங்களுககு பேய் நம்பிக்கை உள்ளது?
எனக்கு எலுமிச்சம் பழம் சுத்தி போடுவது,.முட்டை சுத்தி போடுறது போன்ற மூட நம்பிக்கைகளில் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. ஆண்டவன் ஒருத்தன் இருகான். அதேமாதிரி நல்ல நேரம் கெடட நேரமெல்லாம் கிடையாது. எல்லா நேரமும் நல்ல நேரம்தான். அந்த மாதிரி பாசிட்டிவ் எண்ணத்தோடதான் என்னோட டிராவல் போய்க்கிட்டிருக்கு. செவ்வாய்க்கிழமை ஒரு இடத்துக்கு போகனும்னா போயிடுவேன் நல்ல நாள் பார்த்து போகனும். நல்லநேரம், ராகுகாலம் பார்க்கிறதும் எனக்கு பிடிக்காது.
அதேபோல், எனக்கு சின்னத்திரையில் ஓப்பனிங்கிலேயே நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஆனாலும், நடிப்புல நான் சாதிச்சிட்டதா நெனக்கல. இப்பத்தான் ஒரு ப்ரீகேஜி போய்க்கிட்டிருக்கிற உணர்வு எனக்குள் இருக்கு.
சீரியல்களிலும் சினிமா மாதிரி காட்சிகள் இடம்பெறுவது பற்றி?
இது சீரிய்ல்களின் வளர்சசியைத்தான் காட்டுகிறது. முக்கியமாக, சீரியல் வில்லன் என்றால் ஒரு லிமிட்தான் இருந்தது. ஆனால் இப்போது அப்படியல்ல. லிமிட் தாண்டி சினிமா பாணியில் நடிக்கிறார்கள். அப்படி டைக்டர்களும் கதை ரெடி பண்ணி நடிக்க வைக்கிறார்கள். அந்த வகையில், விஜய் டிவிக்காக நான் நடித்த புதுக்கவிதை தொடரில் பொம்பள பொறுக்கியாக நடித்திருக்கிறேன். அதில் ஒரு பெண்ணை இப்படித்தான் பார்க்க வேண்டும் என்பதை மீறி உடம்பையெல்லாம் கண்களால் அளவெடுக்கிற மாதிரி காட்சிகள் உள்ளன. இது சினிமாவுக்கு இணையான காட்சியமைப்புகள். இந்த வேடத்தில் நான் நடித்ததால்தான் குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்டேன். இந்த மாதிரியான ஒரு வேடத்தில் நான் நடிக்க வேண்டும் என்று முன்பே நினைத்திருந்தேன்.அநத வாய்ப்பு ஆரம்பத்திலேயே எனக்கு கிடைத்திருக்கிறது.
அந்த தொடரில் தம்பி மனைவியை நான் சைட் அடிப்பேன். அதைப்பார்த்து அவன் என்னை அடிப்பான். ஆனால் நான்நிறுத்தமாட்டேன் மறுபடியும் மறுபடியும் அவளை வர்ணித்துக்கொண்டேயிருப்பேன். ஆக அந்த கேரக்டர் அதிரடியாக இருக்கும். அதனால்தான் என்னை பேச வைத்தது.
இப்படி நான் டிவியிலேயே சினிமாவுக்கு இணையான கேரக்டர்களில், காட்சிகளில் நடிப்பதால் பியூச்சரில் சினிமாவில் நடிப்பதற்கு என்னை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கின்றன.
சீரியல்களில் பெண்களை மையமாக வைத்தே டைட்டில் வைக்கப்படுவது பற்றி?
சீரியல்களைப்பொறுத்தவரை வீட்டில் இருக்கும் பெண்களை மனதில் கொண்டுதான் தயாராகின்றன. அதனால்தான் பெண்களை மையமாக வைத்து கதை உருவாக்குகிறார்கள். அதேசமயம், ஒரு பெண் லீடு ரோலில் நடித்தாலும், அவருககு எதிரியாக ஒரு வில்லன் வேண்டும். அப்படிப்பட்ட வில்லனாக என் போன்ற நடிகர்கள்தான் நடிக்கிறோம். அதனால் சீரியல்களைப்பொறுத்தவரை என்னதான் பெண்களை மையப்படுத்துவது போன்று இருந்தாலும், ஆண்கள்தான் கதையில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். அதேசமயம், அண்ணன்-தம்பி பாசம், அபபா-மகள்கள் பாசத்தை முன்னிறுத்தியும சீரியல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.அதனால் சீரியல்களில் நடிகர்களுக்கு வேலை இல்லை என்று சொல்ல முடியாது. நடிகைகளுக்கு இணையாக நடிகர்களுக்கு வேலை இருக்கிறது.
சீரியல்களில் நடிப்பதற்கு முன்பு ஒர்க் செய்வீர்களா?
என்னைப்பொறுத்தவரைசிலநாட்களில் அடுத்த நாள் நடிக்கும் காட்சிகள் பற்றியே முந்தின நாளே தெரிந்து கொண்டு ரிகர்சல் பார்த்துக்கொள்வேன். அல்லது ஸ்பாட்டுக்கு வந்த பிறகு ஒரு மணி நேரத்துக்கு முன்பே நான் நடிக்க வேண்டிய காட்சிகளை உதவி இயக்குனர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு, அதை மனதில் ஏற்றிக்கொண்டு, எப்படி எப்படி நடிக்கலாம் என்று ஐடியா பண்ணிக்கொள்வேன். இப்படி எல்லா சீரியல்களிளிலுமே நான் ஹோம் ஒர்க் செய்வதை தவறாமல் பின்பற்றி வருகிறேன் என்கிறார் பெரோஸ்கான்.

கருத்துரையிடுக