பாலிவுட்டை மிரட்ட போகும் லிங்கா

ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோரது நடிப்பில் தமிழ்த் திரையுலகின் இந்த ஆண்டின் மிக முக்கியமான படமாக இன்னும் சில
நாட்களில் வெளியாக உள்ள படம் 'லிங்கா'. இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் வசூல் வரலாற்றை 'லிங்கா' முறியடிக்கும் என திரையுலகினரிடையே மிகப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளது.

ரஜினிகாந்த் படங்களுக்கு ஹிந்தியிலும் எப்போதுமே ஒரு வரவேற்பு இருக்கும். பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாரூக்கான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். அவருடைய 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் கூட ரஜினிக்காகவே ஒரு பாடலை வைத்திருந்தார். அமிதாப்பச்சன், ஆமீர் கான் உட்பல பலரும் ரஜினியின் நண்பர்கள் வட்டத்திலும் ரசிகர்கள் வட்டத்திலும் இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹாவும் நடித்திருப்பதால் 'லிங்கா' படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றை மும்பையில் நடத்த இருக்கிறார்களாம். அதில் கலந்து கொள்ள பாலிவுட் நட்சத்திரங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். 'லிங்கா' படத்தின் ஹிந்தி டப்பிங்கைத்தான் அவர்களுக்காக திரையிட உள்ளார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன. 'லிங்கா' ஹிந்தியிலும் சாதனை படைக்குமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget