நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் பயிற்சி பெற ஆசையா

கடந்த பல வருடங்களாக தமிழ் நாட்டில் உள்ள நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் என்.எல்.சி., நிறுவனம் தொடர்ந்து
லாபகரமாக இயங்கி வரும் எரிசக்தி நிறுவனமாகும். இந்த நிறுவனம் பொதுத் துறை நிறுவனம் என்பதுடன் மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வருவது சிறப்பான ஒன்றாகும். தமிழகத்தின் முக்கிய அடையாளமாகத் திகழும் என்.எல்.சி., நிறுவனம் திருச்சியில் டெக்னிகல் பயிற்சிகளை வழங்குவதற்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. 

பிரிவுகள்: என்.எல்.சி., நிறுவனத்தில் டெக்னீசியன் அப்ரென்டிஸ் டிரெய்னிங் (டி.ஏ.டி.,) மற்றும் கிராஜூவேட் அப்ரென்டிஸ் டிரெய்னிங் (ஜி.ஏ.டி.,) என்ற இரண்டு பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

காலியிட விபரம்: டி.ஏ.டி., பிரிவில் மெக்கானிக்கலில் 70, எலக்ட்ரிக்கலில் 60, சிவிலில் 20, இன்ஸ்ட்ரூமென்டேஷன், கெமிக்கல், மைனிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், கமர்ஷியல் பிராக்டிஸ் ஆகிய பிரிவுகளில் தலா 10 காலியிடங்கள் உள்ளன. ஜி.ஏ.டி., பிரிவில் மெக்கானிக்கலில் 50, எலக்ட்ரிகலில் 50, சிவிலில் 15, இன்ஸ்ட்ரூமென்டேஷன், கெமிக்கல், மைனிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் ஆகிய பிரிவுகளில் தலா 10, டிரான்ஸ்போர்டேஷனில் 15 காலியிடங்கள் உள்ளன.

தகுதி: டெக்னீசியன் அப்ரென்டிஸ் டிரெய்னிங்கிற்கு மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் உரிய பிரிவில் முடித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிப்பது குறித்த முழுமையான தகவலை பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும். விண்ணப்பிக்க இறுதி நாள்: 03.01.2015

இணையதள முகவரி: www.nlcindia.com/
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget