TNPSC ஹெல்த் ஆபிசர் வேலை வாய்ப்பு

தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி., அமைப்பு தமிழக அரசுப் பணிக்கான காலியிடங்களை பொது எழுத்துத்
தேர்வின் மூலம் நிரப்பி வருவது அனைவரும் அறிந்ததுதான். மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் என்ற பெயரில் இந்திய சுதந்திர காலத்திற்கு முன்னரே 1929ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு பின் நாட்களில் டி.என்.பி.எஸ்.சி., என்ற பெயர் மாற்றம் பெற்றது. இந்த அமைப்பின் சார்பாக ஹெல்த் ஆபிசர் பிரிவில் காலியாக உள்ள 33 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி.,யின் ஹெல்த் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பி.எஸ்.எஸ்.சி., எனப்படும் பேச்சிலர் ஆப் சானிடரி சயின்ஸ் பட்டப் படிப்பை மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். கோல்கட்டா பல்கலைக் கழகத்தின் மூலமாக இரண்டு வருட டிப்ளமோ இன் ஹெல்த் படித்தவர்களும், சென்னை மருத்துவக் கல்லுாரியின் மூலம் ஒரு வருட காலம் வழங்கப்படும் சானிடரி சயின்ஸ் பிரிவிலான சிறப்புப் படிப்பை முடித்து பப்ளிக் ஹெல்த் பிரிவிலான லைசென்சியேட் படிப்பையும் முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.175/-ஐ இந்தத் தேர்வை எதிர்கொள்ள விரும்புபவர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து பெறலாம்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 09.01.2015

இணையதள முகவரி: <http://www.tnpsc.gov.in/>
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget