மடிசார் மாமியாகும் எமி ஜாக்சன்

வெளிநாட்டு பெண்ணான எமி ஜாக்சன் ‘மதராச பட்டணம்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக
நடித்தார். அதன்பின் விக்ரம் நடிப்பில் உருவான ‘தாண்டவம்’ படத்தில் நடித்தார். சங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வெளிவர காத்திருக்கும் ‘ஐ’ படத்திலும் விக்ரமுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.

தற்போது உதயநிதியுடன் ஜோடி சேர்ந்து ‘கெத்து’ என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதுவரை மாடர்ன் டிரஸ்ஸில் வலம் வந்த எமி ஜாக்சன் இப்படத்தில் பிராமின் பெண்ணாக மடிசார் கட்டி நடிக்க இருக்கிறாராம். இப்படத்தை ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்குகிறார். இமான் இசையமைக்கவுள்ளார். 

இப்படம் அப்பாவிற்கும் மகனுக்கு இடையே உள்ள உறவை வெளிப்படுத்தும் குடும்ப சித்திரமாக உருவாக்க இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget