வேர்ட்டில் புத்தம் புது வசதிகள்

தானாகச் சுழன்று செல்ல: மிக நீளமான டாகுமெண்ட்டில், வேகமாக பக்கங்களைச் சுழற்றிச் செல்ல, நமக்கு மவுஸில் உள்ள சிறிய சக்கரம்
உதவுகிறது. இரண்டு பட்டன்களுக்கிடையே இந்த சிறிய சக்கரம் நமக்குத் தரப்படுகிறது. மவுஸை டாகுமெண்ட்டில் வைத்து, இந்தச் சிறிய சக்கரத்தினை அழுத்தி இழுத்தால், பக்கங்கள் வேகமாக, நாம் நகர்த்துவதற்கு ஏற்ப, கீழாகவோ, மேலாகவோ நகர்ந்து செல்லும். ஆனால், இப்போது வரும் சில மவுஸ் சாதனங்களில், இந்த வீல் இருப்பதில்லை. இருப்பினும் இந்த வசதியைப் பெறுவதற்கு சில செட்டிங்ஸ் அமைப்புகள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாம்.

1. Tools மெனுவிலிருந்து Customize என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Customize டயலாக் பாக்ஸைக் காட்டும். 

2. இதில் Commands என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். வேர்ட் கட்டளைகள் சில வரிசையாகத் தரப்படும். 

3. இந்த பட்டியலின் இடது பக்கம் All Commands என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். 

4. வலது பக்கம் உள்ள பிரிவில் AutoScroll என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். 

5. இந்த AutoScroll ஆப்ஷனை உங்கள் டூல்பார்கள் உள்ள இடத்திற்கு இழுத்துச் செல்லவும். மவுஸ் பட்டனை விட்டுவிட்டால், AutoScroll என்னும் பெயருடன் ஒரு பட்டன் டூல்பார்களில் தோன்றுவதைப் பார்க்கலாம். 

6. தொடர்ந்து Close என்பதில் கிளிக் செய்து Customize டயலாக் பாக்ஸை மூடவும். 

இந்த புதிய கட்டளையைப் பயன்படுத்த, புதிய டூல் பார் பட்டனில் கிளிக் செய்திடவும். அவ்வாறு செய்திடுகையில், வலது பக்கம் உள்ள நெட்டு வாக்கில் உள்ள பார் மாறும். புதிய இரட்டை அம்புக் குறி ஒன்று தோன்றும். இந்த அம்புக்குறியினை மேலாகவும் கீழாகவும் ஸ்குரோல் பாரில் நகர்த்துவதன் மூலம், டாகுமென்ட் எவ்வளவு வேகமாக நகர்த்தப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்து செட் செய்திடலாம். இந்த வேகமாக நகர்த்தும் செயல்பாட்டிலிருந்து விடுபட எஸ்கேப் கீயை அழுத்துங்கள். அல்லது மவுஸ் பட்டனை அழுத்துங்கள்.

டாகுமெண்ட் இறுதியாக சேவ் செய்த நாள்: வேர்ட் புரோகிராமில், ஒவ்வொரு முறை நீங்கள் டாகுமெண்ட் ஒன்றினை சேவ் செய்திடுகையில், அந்த டாகுமெண்ட் குறித்த சில விஷயங்கள் தானாகவே அற்றைப்படுத்தப்படுகின்றன. இதில் ஒரு தகவல், அதனை இறுதியாக எடிட் செய்த தேதியாகும். இந்த தேதியை, அந்த டாகுமெண்ட்டிலும் பதியச் செய்திடலாம். அதனையும் தானாக அப்டேட் செய்திடும் வகையில் செட் செய்திடலாம். இதற்குக் கீழே கண்டுள்ளபடி செயல்படவும்.

1. உங்கள் கர்சரை டாகுமெண்ட்டில் எந்த இடத்தில், இறுதியாக எடிட் செய்த தேதி காட்டப்பட்டு, ஒவ்வொரு முறையும் அப்டேட் ஆக வேண்டுமோ, அந்த இடத்தில் வைக்கவும்.

2. வேர்ட் ரிப்பனில் டேப்பினைக் கிளிக் செய்து அப்பிரிவினைக் காட்டவும்.

3. இதில் உள்ள டெக்ஸ்ட் குரூப்பில் (Text group) Quick Parts என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர், Fields என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் Field டயலாக் பாக்ஸைக் காட்டும்.

4. டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள பீல்ட் வகைகளில் Date and Time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

5. இங்கு வலது பக்கத்தில் உள்ள பீல்ட் பட்டியலிலிருந்து SaveDate என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 

6. தேதி எப்படிக் காட்டப்பட வேண்டுமென்பதற்கான வடிவமைப்பினைத் தேர்ந்தெடுக்க Options என்பதில் கிளிக் செய்திடவும் .

அடுத்து பீல்டை அமைக்க ஓகே கிளிக் செய்திடவும். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget