புத்தியை தீட்டும் நடிகை மஞ்சுளா

தமிழன்டா, கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு உள்பட சில படங்களில் நடித்தவர் மஞ்சுளா. இப்போது மங்குனி பாண்டியர்கள் என்ற படத்தில்
நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் வில்லேஜ் கெட்டப்பில் நடிக்கும் மஞ்சுளாவுக்கு, சினிமாவில் பெரிய அளவில் வளர வேண்டும் என்பதை விட, குறைவான படங்களில் நடித்தாலும் தன்னை வைக்கும் அதிரடியான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதில்தான் ஆர்வம் மிகுதியாம்.

இதுபற்றி மஞ்சுளா மேலும் கூறுகையில், சினிமாவில் நடிக்க வரும்போது எனக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை. அதனால்தான் முதல் படத்திலேயே புதுமுக நடிகருக்குத்தான் ஜோடியாக நடித்தேன். அதன்பிறகுதான் நடிப்பு என்றாலே என்னவென்று தெரிந்து கொண்டேன். ஆனால் இப்போது, படம் முழுக்க வந்து செல்லும் கதாநாயகியாக வரவேண்டும் என்பதை விட நாலு சீனில் வந்தாலும் நச்சுன்னு நடித்து விட்டு செல்லக்கூடிய வேடங்களில் நடிப்பதில் எனக்கு ஆசை அதிகமாக உள்ளது.

அதனால்தான், டம்மியாக சில காட்சிகளில் மட்டுமே டூயட் பாடி விட்டு செல்லும வேடங்களில் யாராவது நடிக்க சொன்னால் நான் ஏற்பதில்லை. எனக்கும் ஒரு நாலு காட்சியிலாவது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிகள் இருக்கும் படஙகளை மட்டுமே ஏற்கிறேன் என்று கூறும் மஞ்சுளா, இதுவரை பெரிதாக கிளாமர் காண்பித்து நடிக்கவில்லை என்றபோதும், எதிர்காலத்தில் அந்த மாதிரியான வேடங்கள் கிடைத்தால் டைரக்டர்கள சொல்வதுபோன்று தேவையான கிளாமரை வெளிப்படுத்தி நடிக்கவும் தயாராக இருக்கிறாராம். அதோடு, அயிட்டம் பாடல்களுக்கு நடனமாட வேண்டுமென்றால் டபுள் ஓகேவாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget