பசிபிக் பெருங்கடலில் ஓரியன் விண்கலம் விழுந்தது

எதிர்காலத்தில் செவ்வாய்கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்காக ஏவப்பட்ட ஆளில்லாத ஓரியன் என்ற விண்கலம் அதன் இலக்கு புள்ளியான 275
மைல்கள் (442km) கலிபோர்னியாவின் மேற்கு பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று தெறித்து விழுந்தது. இந்த விண்கலத்தை அமெரிக்க கடற்படை மற்றும் நாசா குழு ஒருங்கிணைந்து வெற்றிகரமாக பசிபிக் பெருங்கடலிலிருந்து மீட்டுள்ளனர். இந்த மிஷனின் தொழில்நுட்ப வளர்ச்சி மனித விண்வெளிப்பயணத்திறகு ஆதரவையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது என்று ஆங்கார கமாண்டிங் அதிகாரியான கேப்டன் மைக்கேல் மெக்கெனா கூறியுள்ளார். 

வெற்றிகரமாக திரும்பிய எக்ஸ்ப்ளோரேஷன் ஃப்ளைட் டெஸ்ட் 1 (EFT-1) சோதனை முயற்சி, எதிர்காலத்தில் விண்வெளிக்கு செல்லும் விமானங்களை மீட்டெடுக்கும் தொழில்நுட்பத்தை சோதிக்கும் வகையில் அமெரிக்க அரசாங்கத்தின் இன்டர்-ஏஜென்சி முயற்சியின் ஒரு பகுதியாகும். இது ஓரியனின் முதல் விண்வெளிப்பயணம் ஆகும், 

பசிபிக் கடலில் விழும் ஐந்தாவது சோதனையில் நெவி வெல் டெக் மீட்பு முறையை பயன்படுத்தியுள்ளனர், மற்ற சோதனைகளுக்கு மாக் அப் முறையை பயன்படுத்தியுள்ளனர். இந்த நான்கு சோதனைகளும் விமானத்திற்கு மீட்பு பணியை தயார் செய்தவதற்கு முன்பே நடத்தப்பட்டது, இந்த அனைத்து சோதனைகளும் நன்றாக முடிந்தது. முதல் சோதனையை ஆகஸ்ட் 2013ம் ஆண்டில் வர்ஜீனியாவில் உள்ள நேவல் ஸ்டேஷன் நோர்போக்கில் நடைபெற்றது. மற்ற சோதனைகள் 2014ம் -ஆண்டுக்கு முன்னதாக மீட்பு டெஸ்ட் (URTs) என்று அழைக்கப்படும் முறையில் நடத்தப்பட்டன. 

இந்த ஓரியன் மிஷன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பசிபிக் பெருங்கடலில் விழுந்துள்ளது. அதனை அமெரிக்க கடற்படையினர் மற்றும் நாசா குழுவினர் ஒருங்கிணைந்து நேற்று இரவு வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.  
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget