பொங்கலுக்கு 'ஐ, என்னை அறிந்தால், ஆம்பள' ஆகிய படங்கள் வெளிவரும் என்று முதலில் சொல்லப்பட்டது. அதில் இப்போது சிறிய
மாற்றமாக 'ஐ' படம் ஒரு வாரம் முன்னதாக ஜனவரி 9ம் தேதியே வெளியிடப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. தேவையற்ற போட்டியைத் தவிர்க்கவும், அதிக திரையரங்குகளில் வெளியிட்டு ஒரு வாரத்திற்குள் முடிந்த அளவிற்கு அதிகமான வசூலை அள்ளவுமே இந்த ஏற்பாடு என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் சுமார் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'ஐ' படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று வெளியிடப்பட்ட 'லிங்கா' பட விளம்பரங்களில் உள்ள திரையரங்குகளை விட 'ஐ' படத்திற்காக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் அதிகமான திரையரங்குகள் இடம் பெற்றிருந்தன. ஷங்கர் இதுவரை இயக்கிய படங்களிலேயே கடின உழைப்புடனும் அதிக பொருட்செலவுடனும் 'ஐ' படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பல பல இந்திய மொழிகளிலும், சில வெளிநாட்டு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் சுமார் இரண்டு வருடங்களாக இந்தப் படத்தில் மட்டுமே படத்தின் நாயகனான விக்ரம் நடித்து வந்தார். ஏற்கெனவே, 'ஐ' படத்தின் டீசர் மூன்று மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டு இதுவரை சுமார் 80 லட்சம் பார்வையாளர்களை யு டியூபில் பெற்றுள்ளது. விரைவில் 'ஐ' படத்தின் டிரைலர் வெளியிடப்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கருத்துரையிடுக