சோனாக்சியை மிரட்டும் சோனம்

சல்மான் மற்றும் அர்பாஜ் கான் உள்ளி்ட்ட கான் நடிகர்களின் அபிமான நடிகையாக இருந்த சோனாக்ஷி சின்கா, புதிய படத்தில், சோனம்
கபூரும் இணைந்துள்ளதால், சோனாக்ஷி அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்பாஜ் கான் தயாரிப்பில், சல்மான் கான் உடன் சோனாக்ஷி சின்கா இணைந்து நடித்த தபாங் படம் சூப்பர் ஹிட் ஆனது. இதனையடுத்து, கான் நடிகர்களின் அபிமான நடிகையாக சோனாக்ஷி உருவெடுத்தார். அவர்களுடன் நட்பும் பேணி வந்தார். இந்நிலையில், அர்பாஜ் தயாரிப்பில் உருவாகி வரும் டோலி கி டோலி படத்தில் நடிக்க சோனம் கபூர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது, சோனாக்ஷி சின்காவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சோனம் கபூர், சல்மானுடன் பிரேம் ரத்தன் தான் பயோ என்ற படத்திலும் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget