தல ரசிகையான எமி ஜாக்சன்

ரஜினியுடன் ஒரு படத்திலேனும் நடிக்க வேண்டும் என்று இருந்த நிலை மாறி, இப்போது ஒரு படத்திலாவது அஜீத்துடன் டூயட் பாட வேண்டும்
என்பதுதான் எனது சினிமா லட்சியம் என்று பல நடிகைகள் தற்போது கோலிவுட்டில் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இன்னும் சிலரோ, அஜீத் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க சான்ஸ் கிடைத்தால்கூட போதும் என்கிறார்கள்.

இந்த நிலையில், ஏற்கனவே இருந்த தமன்னா வீரம் படத்திலும், அனுஷ்கா என்னை அறிந்தால் படத்திலும் நடித்து விட்டனர். அவர்களைத் தொடர்ந்து லட்சுமிமேனன், பிந்து மாதவி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பல நடிகைகள் நாங்களும் அஜீத் ரசிகைகள்தான. அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறோம் என்கிறார்கள்.

இந்த பட்டியில இப்போது ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சனும் சேர்ந்துள்ளார். கெளதம்மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்த இவர், சமீபத்தில் கெளதமை சந்தித்தபோது, கோலிவுட் நடிகர்கள் அஜீத்தான் என்னை கவர்ந்த ஹீரோ. அவருடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கும் இருக்கிறது. அதனால் சந்தர்ப்பம் வரும்போது என்னை அவருடன் நடிக்க வையுங்கள் என்று கேட்டுக்கொண்டாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget