2015ல் டாப் ஹீரோக்களை ஓரங்கட்டும் நியூ ஹீரோஸ்

2014ம் ஆண்டில் வெளிவந்த 200க்கும் மேற்பட்ட படங்கள் மூலம் 100க்கும் மேற்பட்ட ஹீரோக்கள் புதிதாக வந்திருக்கிறார்கள். ஆனாலும் ஹீரோக்கள்
தட்டுப்பாட்டில்தான் இருந்தது தமிழ் சினிமா. முன்பெல்லாம் ஒரு ஹீரோ ஆண்டுக்கு நான்கைந்து படங்களில் நடிப்பார்கள். 80 களில் ரஜினியும், கமலும் வருடத்துக்கு பத்து படங்கள் வரை நடித்தனர். கடந்த சில வருடங்கள் முன்பு வரை சத்யராஜ் அப்படி நடித்துக் கொண்டிருந்தார்.

இப்போது ஆண்டுக்கு மூன்று படங்கள் வரை நடித்தாலே பெரிய விஷயமாக இருக்கிறது. 2014ம் ஆண்டு கமல் நடித்த படமே வெளிவரவில்லை. ரஜினி நடித்து லிங்கா ரிலீசானது. அனிமேஷன் படமான கோச்சடையான் ரிலீசானது. அஜீத் வீரம் படத்தில் மட்டும் நடித்தார். ஜில்லா, கத்தி என்ற இரண்டு படங்களில் நடித்தார் விஜய், சூர்யா நடிப்பில் அஞ்சான் மட்டும் ரிலீசானது. விதார்த், விமல் ஆகியோர் தலா 4 படங்களில் நடித்தார்கள். விக்ரம் பிரபு 3 படங்களில் நடித்தார். சிவகார்த்திகேயன் பிசியாக இருந்தாலும் மான்கராத்தே மட்டும்தான் ரிலீசானது.

விஜய்சேதுபதி, ஜெய், விஷ்ணு, விஷால், போன்றவர்கள் இரண்டு படங்களில் நடித்தார்கள். ஹீரோக்களை வைத்து படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தும், அவர்கள் குறிப்பிட்ட பத்து ஹீரோக்களையே விரும்புவதால் ஹீரோக்களின் படங்கள் குறைவாகத்தான் வெளிவந்தது.

2014ம் ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட புதிய ஹீரோக்கள் வந்தும் அவர்கள் யாரும் டாப் பத்து ஹீரோக்களுக்குள் வரவில்லை. இராமானுஜன் படத்தில் நடித்த அபிநய், நளனும் நந்தினியும் படத்தில் நடித்த மைக்கேல், கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ், கயல் படத்தில் நடித்த சந்திரன், வாயை மூடி பேசுவோம் படத்தில் அறிமுமாக மம்முட்டி மகன் துல்கர் சல்மான் ஆகியோர் மட்டுமே கொஞ்சம் கவனிக்க வைத்தார்கள். ஆனால் அவர்களால் டாப் ஹீரோக்கள் பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை. கடந்த ஆண்டுகளில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மாதிரி இந்த ஆண்டு புயல்மாதிரி ஹீரோக்கள் யாரும் அறிமுகமாகவில்லை. சிம்ஹா வேகமாக வளர்ந்து வந்தாலும் அவர் சென்ற ஆண்டே அறிமுகமாகிவிட்டார்.

2015லாவது பழைய ஹீரோக்களை ஓரங்கட்ட புதிய அலை புறப்பட்டு வருகிறதா? என்று பார்க்கலாம்...
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget