ஆர்யாவா பயத்தில் சஞ்சனா சிங்

ரேனிகுண்டா படத்தில் அறிமுகமானவர் சஞ்சனா சிங். அதையடுத்து, ரகளை புரம், வெற்றிச்செல்வன், அஞ்சான் உள்பட பல
படங்களில் நடித்த இவர், சமீபத்தில் வெளியான மீகாமன் படத்தில் கவனிக்கப்படும் ஒரு விலைமாது வேடத்தில் நடித்திருந்தார். கதைப்படி ஒரு வில்லனின் மனைவியாக நடித்தபோதும், ஒரு கட்டத்தில் ஆர்யாவுக்கு உதவி செய்யும் காட்சியிலும் நடித்தார். அந்த வகையில், மீகாமன் படத்தைப்பொறுத்தவரை அப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஹன்சிகாவை விட, சஞ்சனா சிங்கிற்குத்தான் கதையோடு கலந்த கதாபாத்திரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த வேடத்தில் நடித்தது பற்றி அவர் கூறும்போது, ரேணிகுண்டா படத்திற்கு பிறகு நான் பல படங்களில் நடித்தபோதும் அழுத்தமான வேடங்கள் கிடைக்கவில்லை. ஆனால், இந்த படத்தில்தான் நான் எதிர்பார்க்காத வேடம் கிடைத்தது. விலைமாது வேடம் என்றாலும், படம் பார்த்தவர்களின் மனதைதொடும் வேடம். இந்த மீகாமன் படத்தைப்பார்த்து விட்டு பல சினிமா நண்பர்களும் எனக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இப்படத்தில் நான் ஆர்யாவுடன் காம்பினேசன் காட்சிகளில் நடித்தபோது அவரைப்பார்த்ததும் பயந்து விடுவேன். அதனால் நான் பேசவேண்டிய டயலாக்கை பலமுறை மறந்திருக்கிறேன். ஆனால் ஆர்யா எனக்கு சப்போட்டாக இருந்தார். அதனால் அவருடன் நான் இணைந்து நடித்த காட்சிகள் சிறப்பாக வந்தது. அது மட்டுமின்றி, இந்த மீகாமனில் நான் நடித்த வேடம் வித்தியாசமாக வெளிப்பட வேண்டும் என்பதற்காக, படப்பிடிப்பு தளத்தில்கூட அதிகமாக யாரிடமும் பேசாமல் அந்த கேரக்டராகவே முழுசாக மாறி நடித்தேன் என்கிறார் சஞ்சனா சிங்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget