என்னை அறிந்தால் லேட்டஸ்ட் நியூஸ்

உலகெங்கும் உள்ள அஜீத் ரசிகர்களுக்கு வருகின்ற புது வருடமான 2015இன் ஆரம்பம், இரட்டிப்பு மகிழ்ச்சியுடன்அமர்க்களமாக துவங்க உள்ளது.
ஏற்கனவே அறிவித்து இருந்த இசையுடன் , என்னை அறிந்தால் படத்தின் முன்னோட்டமும் அன்றே வெளியாக உள்ளது.சமீபத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் உலகெங்கும் பரவியதோடு ,குறைந்தகாலக்கட்டத்தில் அதிகம் பேர் பார்த்த வரலாற்றையும் உண்டாக்கியது.வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி என்னை அறிந்தால் படத்தின் இசையுடன் படத்தின் முன்னோட்டமும் வெளி வருவது ரசிகர்களுக்கு பேரானந்தம் தரும். புது வருடத்தன்று ரசிகர்களுக்கு இந்த இரட்டிப்பு பரிசு மகிழ்ச்சி தரும் என்பதில் எங்களுக்கு பெருமை. படப்பிடிப்பு முடிந்து , மற்ற பணிகள் இறுதி கட்டத்தை எட்டிக் கொண்டு இருக்கிறது. ஜனவரி 1ஆம் தேதி வியாழக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.இதை தொடர்ந்து இந்த பொங்கலும் என்னை அறிந்தால் வெளியாவதை தொடர்ந்து ரசிகர்களுக்கு மட்டுமின்றி , எல்லா தரப்பு மக்களுக்கும் இனிப்பு பொங்கலாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்று பெருமிதத்துடன் கூறினார் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget