இந்தியாவில் ஆப்பிள் விற்பனை மையங்கள்

இந்திய தகவல் தொழில் நுட்ப சந்தையினை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம். முன்பு ஒரு
முறை கருத்து தெரிவிக்கையில், சீனாவுடன் ஒப்பிடுகையில், இந்தியாவை அடுத்த நிலையில் தான் வைத்திருக்கிறோம் என்று ஆப்பிள் கூறி இருந்தது. தற்போது, இந்தியாவில் இயங்கும் மொபைல் போன்கள் விற்பனையாளருடன் இணைந்து 500 ஆப்பிள் நிறுவன சாதனங்களை விற்பனை செய்திடும் மையங்களைத் திறந்திட ஆப்பிள் முடிவெடுத்துள்ளது. 

மெட்ரோ நகரங்களை அடுத்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ள நகரங்கள் பால் தன் கவனத்தைத் திருப்பியுள்ளது. உலக அளவில், தகவல் தொழில் நுட்ப பிரிவில், மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியாவினை ஆப்பிள் கருதுகிறது. இந்தியா நிச்சயம் தன் வளர்ச்சியில், ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களையும் எடுத்துக் கொள்ளும். ஆனால், அதற்கு ஆப்பிள் நிறுவனம் தன் சாதனங்களின் விலையைக் குறைக்கும் முடிவினை எடுத்து அமல் படுத்த வேண்டும். ஏனென்றால், இந்தியா விலை அடிப்படையில் இயங்கும் சந்தையைக் கொண்ட நாடாகும். இதற்கு எடுத்துக் காட்டாக, ஐபோன் 4 விற்பனையை எடுத்துக் கூறலாம். இதன் விலை குறைக்கப்பட்டவுடன், விற்பனையில் பெரிய அளவில் வெற்றி பெற்றது. மற்ற ஆண்ட்ராய்ட் போன்களுடன் ஒப்பிடுகையில், ஐபோன் 4 மிகவும் பின் தங்கிய ஒன்றாக இருந்தாலும், ரூ.20,000 அளவில் அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்ட போது, விற்பனை அதிகரித்தது. டேப்ளட் விற்பனைச் சந்தையிலும், ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு 10% ஆக இருந்தாலும், அது குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் உள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget