பிங் தேடல் இனி பேஸ்புகில் இல்லை

சமூக இணையதளமான பேஸ்புக் இதுவரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் (Bing) தேடல் சாதனத்தினைத் தன் தேடலுக்குப் பயன்படுத்தி
வந்தது. அண்மையில் அதனை நீக்கிவிட்டது. இதற்குப் பதிலாக, தான் வடிவமைத்து உருவாக்கிய தேடல் சாதனங்களையே பயன்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பேஸ்புக்கில் Graph search என்ற பெயரில் தேடல் டூல் ஒன்று இயங்கி வருகிறது. இதற்கு 'பிங்' பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி, பேஸ்புக் பயன்படுத்துபவர்கள், தங்கள் நண்பர்களின் பதிவுகளைத் தேடி அறியலாம். தற்போது நாம் தேடினால், இவை 'பிங்' மூலம் தேடி அறிந்தவை என்ற வரி கிடைக்காது. Facebook Search மூலம் தேடிப் பெறப்பட்டவை என்றே காட்டப்படும். 'பிங்' தேடல் சாதனத்திற்கென மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கொண்ட ஒப்பந்தம் நீக்கப்பட்டாலும், வேறு சிலவற்றில், இந்த இரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget