TNPSC GROUP - IV தமிழக பண்பாடு வினா விடை 49

1507. ஸ்ரீரங்கத்தில் பணியாற்றிய இராமானு ஜருடன் பூசலில் ஈடுபட்டவர் A) இராஜராஜன் B) முதலாம் இராஜேந்திர சோழன் C) ஆதி ராஜேந்திரன் D) குலோத்துங்கன்


1508. வலங்கை (வலதுகை) மற்றும் இடங்கை (இடது கை) ஆகியன தென்னிந்திய சமூகத்தில் முதன் முதலில் அறிவிக்கப்பட்டது A) பாண்டியர் காலம் B) பல்லவர் காலம் C) சோழர் காலம் D) நாயக்கர் காலம்

1509. பின்வருவனவற்றுள் புகழ்வாய்ந்த மணிகிராமம் என்பது A) பொற்கொல்லர்களின் பகுதி B) பவுத்த முனிவர்கள் வசித்த பகுதி C) வர்த்தகர்களின் சங்கம் D) சோழர் அரசு பகுதியில் பிராமணர் களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட பகுதி

1510. நமது தமிழகத்தின் ‘விருந்தோம்பல்’ என்ற சொல்லுக்கு பொருள் யாது? A) புதுமை B) பழமை C) தோழமை D) வாய்மை

1511. கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறப்பாடல் வரி பின்வரும் எந்த பன்னாட்டு அவையின் நுழைவு வாயிலில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது? A) ஐரோப்பிய ஒன்றியம் B) ஐக்கிய நாடுகள் சபை C) சார்க் அமைப்பு D) உலக வங்கி

1512. பல்லவர் காலத்தில் பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கியதற்கு பெயர் என்ன? A) அக்ஹரகாரம் B) சதுர்வேதி மங்களம் C) பிரம்மதேய நிலம் D) தேவதான நிலம்

1513. பின்வரும் பழந்தமிழ் நூல்களில் இசை நூல்களாக அறியப்படுபவை எவை? 1. பெருநாரை 2. பெருங்குருகு 3. பஞ்ச பாரதீயம் 4. கச்சபுட வெண்பா 5. இந்திரகாளியம் A) 1, 2 மற்றும் 3 சரி B) 2, 3 மற்றும் 4 சரி C) 1, 3 மற்றும் 4 சரி D) மேற்கண்ட அனைத்தும் சரி

1514. பொருத்துக. பட்டியல்-1 பட்டியல்-2 a) கடம்பு 1. முருகன் b) காயாம்பூ 2. சிவன் c) கொன்றை 3. திருமால் d) வில்வம் குறியீடு a b c d A) 1 2 3 3 B) 1 3 2 2 C) 2 1 3 2 D) 3 1 2 1

1515. சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைமுறையிலிருக்கும் ஒன்று, பின்வரும் ஆரிய மரபல்லாத சமூக நம்பிக்கைகளுள் எது? A) குழந்தைகள் அணியும் ஐம்படை ஆபரணம் B) திருமணமான பெண்கள் அணியும் தாலி C) விதவைகளின் தலை மொட்டையடிக்கப்படுவது D) பிரிந்து போன ஆன்மாவுக்கு சமைத்த சோற்று உருண்டையைப் படைப்பது

1516. பொருத்துக. பட்டியல்-1 பட்டியல்-2 a) குறிஞ்சி 1. கொற்றவை b) பாலை 2. திருமால் c) முல்லை 3. வேந்தன் d) மருதம் 4. வருணன் e) நெய்தல் 5. முருகன் குறியீடு a b c d e A) 1 2 4 3 5 B) 3 1 2 5 4 C) 5 4 1 3 2 D) 3 2 1 4 5

1517. திராவிடர் கட்டிடக் கலைப் பாணியின் மிகமுக்கியப் பண்புக் கூறு A) சிகரம் B) கோபுரம் C) விமானம் D) மண்டபம்

1518. சோழர்கள் காலத்தில் திரிபுவனீஸ்வரம் என்பது என்ன? A) கல்லூரி B) இடைநிலைக் கல்லூரி C) நடுநிலைப்பள்ளி D) கோயில்

1519. தமிழில் இராமாயணம் ----- காலத்தில் எழுதப்பட்டது A) பல்லவர் B) சோழர் C) நாயக்கர் D) சங்க

1520. சங்க கால தமிழர்களின் சமூக நிலையை விளக்குவது எது? A) மணிமேகலை B) தொல்காப்பியம் C) பத்துபாட்டு D) எட்டுத்தொகை

1521. பின்வரும் கூற்றுகளில் சரியானவை எது/எவை? 1. சங்க இலக்கியங்களில் எண், கணக்கு, நாழிகை யாமம், காதம், கோல் போன்ற அளவைகள் இடம் பெற்றுள்ளன. 2. கணியன் என்பவர் பாடகர் மற்றும் நடனமாடுபவர் ஆவார். A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 1 மற்றும் 2 D) இரண்டும் இல்லை

1522. தமிழகத்தில் ஆடவல்ல நடனமகள் ---- என்று அழைக்கப்பட்டாள் A) கூத்தன் B) பாடினி C) நங்கை D) விறலி

விடைகள்

1507. D

1508. C

1509. C

1510. A

1511. B

1512. B

1513. D

1514. B

1515. B

1516. C

1517. C

1518. D

1519. B

1520. B

1521. A

1522. D
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget