TNPSC GROUP - IV தேர்வுக்கு தயாராக டிப்ஸ்

• அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை பல்கலைக்கழக தேர்வுகள் போல் எண்ணி படிக்கக் கூடாது. இங்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்
என்று எதுவும் கிடையாது. யார் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் வேலை. எனவே, அதிக மதிப்பெண் பெற விரிவாக படிக்க வேண்டியது அவசியம்.

• கடந்த 5 ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களைப் படித்து எவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்து தற்போது நாம் எந்த பாடத்தின் பாகங்களை விரிவாகப் படிக்க வேண்டும் என்று திட்டமிட வேண்டும்.

• முன்பு தேர்வெழுதி வெற்றிபெற்றவர்களை அணுகி, எந்தெந்த புத்தகங்கள், பொது அறிவு, மாத, வார இதழ்கள், பத்திரிகைகள் உபயோகமாக இருந்தன என்பதை கேட்டு அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும்.

• என்னதான் முயற்சி இருந்தாலும் முயற்சியுடன் கலந்த பயிற்சி இருந்தால் வெற்றி வெகு தூரமில்லை. போட்டித்தேர்வுக்கு தயாராவோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்தால் உடனுக்குடன் ஏற்படும் சந்தேகமும், தயக்கமும் நீங்கிவிடும். மாதிரித் தேர்வுகளும், முனைப்போடு தன்னுடன் படிக்கும் பிற பயிற்சியாளர்களின் உத்வேகமும் உங்களை வந்தடைய வாய்ப்புகள் அதிகம்.

• தற்போதைய கேள்விகள், கடுமையாகவும், யோசித்து விடையளிக்கக்கூடிய வகையிலும் அமைகிறது. எனவே, இத்தகைய சூழலில், தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் பாடத்திட்டத்தைப் புரிந்து படித்து பல மாதிரித் தேர்வுகளை எழுத வேண்டும். ஒரு நாளுக்கு 5 மணி நேரம் படிக்க ஆரம்பித்து 8 மணி நேரம் வரை படிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

• உங்களின் மனோபாவம் (Attitude), தன்னம்பிக்கை (Self-confidence) ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு, அரசு பணியில் சேருவேன் என்ற உறுதியை எடுத்தால் வெற்றி உறுதி. நிமிர்ந்து பாருங்கள்.. உங்கள் எதிரிலேயே மகத்தான வெற்றி தெரிகிறது!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget