TNPSC GROUP - IV தேர்வுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை படிப்பது எப்படி

முகவுரையை தயாரித்தவர் யார்? முக்கிய ஷரத்துக்கள் எவை? சட்டத்திருத்த மூலம் சேர்ந்த வாக்கியங்கள் எவை?


அடிப்படை உரிமைகள், கடமைகள், அரசுக்கொள்கை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் தொடர்பான திருத்தங்கள்- எந்தப் பகுதி? ஷரத்துகளின் எண் என்ன?

பார்லிமெண்ட் பற்றிய முழு விவரங்கள், லோக் சபா, ராஜ்ய சபா உறுப்பினர்களின் தகுதிகள், தேர்வுமுறை, எந்த ஷரத்துகளில் இவை சேர்க்கப்பட்டுள்ளன?

குடியரசு தலைவர், துணை குடியரசுத் தலைவர், தகுதிகள், சபாநாயகர், துணை சபாநாயகர்-தகுதிகள், தேர்வுமுறை, அதிகாரம், இப்பதவி வகித்தவர்கள் யார் யார்?

பார்லிமெண்ட் மூலம் அமைக்கப்படும் கமிட்டிகள், பொதுக்கணக்கு குழு, நிதிக்குழு பற்றிய விவரங்கள்.

மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரங்கள், சட்டத்திருத்தங்கள் விவரம்.

பிரதமர், மத்திய அமைச்சர்கள் பற்றிய முழு விவரங்கள், துறையின் பெயர்கள்.

மாநில கவர்னர், முதல்-அமைச்சர், சட்டசபை, மேல்சபை, தகுதி, அதிகாரம்.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதிபதிகள் நியமனம், எல்லை வரம்பு, அனைத்துவகை அதிகாரங்கள், பதவியிலிருந்தவர்கள் பெயர், ரிட் மனுக்கள் (ஹேபியஸ் கார்பஸ், மேண்டமாஸ்).

சட்டத்திருத்தங்கள் (Amendments), முக்கிய திருத்தங்கள் பற்றிய முழுவிவரங்கள்.

12 இணைப்பு பட்டியல்களில் (Schedules) என்னென்ன பொருள்கள் உள்ளன? புதிய மாநிலங்கள், தோற்றம்.

வடகிழக்கு எல்லை மாநிலங்கள் பற்றிய முழுவிவரம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் பேசப்படும் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம், பழங்குடியினர்களின் பெயர்கள்.

 7 யூனியன் பிரதேசங்கள் பற்றிய முழு விவரங்கள், லோக் சபா உறுப்பினர்கள், தலைநகரம்.

மத்திய-மாநில அரசு பணியாளர் தேர்வாணையங்கள், திட்டக்கமிஷன், இந்திய தேர்தல் ஆணையம்.

எந்தெந்த வெளிநாடுகளின் சட்டத்திலிருந்து என்னென்ன ஷரத்துகள் சேர்க்கப்பட்டன? என்ற முழு விவரம்.

நெருக்கடி நிலை, பஞ்சாயத்துராஜ், நகர்பாலிகா, ஐம்மு-காஷ்மீர், சிக்கிம் பற்றிய சிறப்பு அம்சங்கள்.

மேற்குறிப்பிட்ட இனங்களில் முழுக்கவனம் செலுத்தி தயாரிப்பு மேற்கொண்டால், இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவிடலாம்.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget