TNPSC GROUP - IV தேர்வுக்கு பொதுத் தமிழ் பாடங்களை படிப்பது எப்படி

தமிழ் மக்களின் வாழ்வியலுக்கு அடிப்படையாக விளங்கிய தொல்காப்பியம், நன்னூல், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்
கணக்கு நூல்கள், நீதி இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியம், சிற்றிலக்கியம், பக்தி இலக்கியம், கம்பராமாயணம், தமிழுக்கு தொண்டாற்றிய

அறிஞர்கள், உரையாசிரியர்கள், இக்கால இலக்கியங்களான புதினம், கவிதை, சிறுகதைகள், சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்கள், விருது பெற்ற கவிஞர்கள், தமிழர் வணிகம், தொல்லியல் ஆய்வுகள் மற்றும் தமிழ் மொழியில்

அறிவியல் சிந்தனைகள் அடங்கிய வினாக்கள் பொதுத் தமிழ் பகுதியில் இடம்பெறுகின்றன. நூறு மதிப்பெண்களைக் கொண்ட இந்த பகுதியில் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

50 சதவீத மதிப்பெண்களை கொண்ட பகுதி என்பதால் வெற்றித் தோல்வியை நிர்ணயிப்பதில் இப்பகுதிக்கு முக்கிய பங்குண்டு. கடும் போட்டி நிலவும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மொழிப்பகுதி பாடத்தில் நூற்றுக்கு 95 மதிப்பெண் பெறுவது வெற்றியை உறுதிப்படுத்தும். இந்த பகுதியில் அதிக மதிப்பெண்களை பெற 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடநூல்களை தவறாமல் வாசித்திருக்க வேண்டும். இங்கு தரப்பட்டுள்ள வினா-விடைகளோடு நின்றுவிடமால், அது தொடர்புடைய தகவல்களையும் திரட்டி குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget