TNPSC GROUP - IV தேர்வுக்கு பொது ஆங்கிலம் பாடங்களை படிப்பது எப்படி

குரூப் IV தேர்வில் பொது ஆங்கிலத்தை மொழிப் பாடமாக தேர்வு செய்துள்ளவர்கள், அதிக மதிப்பெண்களை பெற ஆங்கிலப் பாடத்துக்கு அதிக
முக்கியத்துவம் தர வேண்டும். 10-ம் வகுப்புக்கான தரத்துடன் நடத்தப்படும் பொது ஆங்கிலம் பகுதியில் இலக்கணம், இலக்கியம், இலக்கியவாதிகள் மற்றும் அவர்களது படைப்புகள் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இலக்கணம் தொடர்பான கேள்விகளில், தேர்வர்களின் நடைமுறை இலக்கண அறிவு பரிசோதிக்கப்படுகிறது. இதில் tenses, voice and degree of Comparison and Transformation of sentences ஆகிய பகுதிக்கு முக்கியத்துவம் அளித்து படிக்க வேண்டும். சொல்வளத்தை அடிப்படையாகக் கொண்ட synonyms, antonyms, affixes, homophones, blending and compound words உள்ளிட்ட கேள்விகளை தவறவிடக்கூடாது.

இலக்கியப் பகுதியில், ஆங்கிலத்தில் புகழ்பெற்ற உரைகள், புகழ் பெற்ற இலக்கியங்களில் இருந்து கேள்விகள் வரும். புகழ் பெற்ற இலக்கியங்களின் வாசகங்களை கொண்டு சில comprehension கேள்விகளும் கேட்கப்படுகின்றன.

இலக்கியவாதிகள் மற்றும் அவர்களது படைப்புகள் பகுதியில் பெரும்பாலும் நினைவாற்றலை சோதிக்கும் கேள்விகள் கேட்கப்படும். Rabindranath Tagore, Walt Whitman, Words Worth மற்றும் Shakesphere போன்ற புகழ் பெற்ற கவிஞர்களின் படைப்புகளில் இருந்து கேட்கப்படும்.

எனவே, இத்தகைய படைப்பாளிகளின் வாழ்க்கை வரலாற்றை தேர்வர்கள் அறிந்திருக்க வேண்டும். புகழ்பெற்ற இலக்கியவாதிகளின் வாழ்க்கைக் குறிப்புகளைத் திரட்டி மனப்பாடம் செய்துகொள்வது நலம்பயக்கும். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget