TNPSC GROUP - IV தேர்வுக்கு இந்தியப் பொருளாதார பாடங்களை படிப்பது எப்படி

டிஎன்பிஎஸ்சி குரூப் IV தேர்வின் பொது அறிவு பகுதியில் 75 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில் பொருளாதாரம் பாடத்திலிருந்து 5 முதல் 10
கேள்விகள் வரை கேட்கப்படலாம்.

கணிதத்தைப் போலவே இந்த பாடத்தையும் புரிந்து படித்தால் அதிக மதிப்பெண்களை பெற முடியும். இந்தியாவின் சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, அரசியல் வளர்ச்சி ஆகியவை ஒன்றுக்கொன்று பிணைந்தவை ஆகும். சுதந்திரத்துக்கு பிறகான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஆழ்ந்து நோக்கினால் இதை புரிந்து கொள்ள முடியும்.

குறிப்பாக ஐந்தாண்டு திட்டங்கள், அவற்றின் இலக்குகளை கூறலாம். அவை நிறைவேற்றப்பட்டபோது நாட்டின் வேளாண்மை, தொழில், மனித வளம் ஆகியவற்றில் ஏற்பட்ட வளர்ச்சியையும், அதன் மூலம் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் உருவான மாறுதல்களையும் காணமுடியும்.

எனவே இந்திய பொருளாதாரம் என்பது புரிதலோடு ஊன்றி படிக்க வேண்டிய பகுதியாகும். பொருளாதாரத் தன்மைகள், நிலச் சீர்த்திருத்தம், கிராம மற்றும் சமூக நலத் திட்டங்கள், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு ஆகிய திட்டங்களில் இருந்து கேள்விகளை எதிர்பார்க்கலாம். 2001 மற்றும் 2011ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget