TNPSC GROUP - IV தேர்வுக்கு அறிவியல் பாடங்களை படிப்பது எப்படி

குரூப்-4 தேர்வு வினாக்களில் பொது அறிவியல் பாடத்திட்டத்தில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து குறைந்தபட்சம் 15 கேள்விகள் முதல் 20 கேள்விகள் வரை கேட்கப்படுவது முந்தை ஆண்டு வினாத்தாள்களை ஆய்வு செய்தால் தெரிய வரும். சில வருடங்கள் இயற்பியல், வேதியியலில் 10 கேள்விகளும், சில ஆண்டுகள் தாவரவியல், விலங்கியலில் 10 கேள்விகளும் கேட்கப்படுகின்றன. 

கேள்விகள் எல்லாம் அடிப்படை அறிவியலில் இருந்து கீழ்க்கண்டவாறு கேட்கப்படுவதை அறிய முடிகிறது. இயற்பியல் - கண்டுபிடிப்புகள், சூரியன், சூரிய ஆற்றல், சூரிய கோள்கள், காந்தம், மின்சாரம், மின்அறிவியல், இயற்பியலின் அனைத்து அடிப்படை விதிகள், அவற்றின் செயல்பாடுகள் வேதியியல் - தனிமங்கள், அமிலம், காரம், பயிர்களுக்கான உரங்களின் வேதியியல் பெயர்கள், ஆக்சிஜனேசன், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், சோடியம் கார்பனேட், பயோ-டீசல், யுரேனியம், பிளிச்சிங் ஏஜெண்ட், குளோரோபாம், தங்கம், வெள்ளி, காட்மீயம், இயற்கை வாயு தொடர்பான விவரங்கள் தாவரவியல் - தாவர செல்கள், கிளைக்காலஜிஸ், புரோட்டோ பிளாசம், உணவுப்பயிர்கள், தாவரப்பெயர்கள், தாவரங்களின் சுவாசம், ஒளிச்சேர்க்கை உயிரியல் - நாளமில்லா சுரப்பிகள், ரத்தங்கள், வைட்டமின்கள், டிஎன்ஏ, மனித உடல் உறுப்பு நோய்கள் விவரம், பாக்டீரியா, வைரஸ் நோய்கள் எனவே, தேர்வெழுதுவோர் 6-வது வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பொது அறிவியல் புத்தகங்கள், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக குறிப்புகள் எடுத்துப் படித்தால் அறிவியல் கேள்விகளுக்கு நல்ல முறையில் பதில் அளித்து தேர்வில் வெற்றிபெறலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget