TNPSC GROUP - IV தேர்வுக்கு புவியியல் பாடத்தை படிப்பது எப்படி

புவியியல் பாடத்திலும் கணிசமான எண்ணிக்கையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. புவியியலை பொருத்தமட்டில், இந்தியாவில் உள்ள
அனைத்து விலங்குகளின் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், காடுகள், முக்கிய நதிகள், ஆறுகளின் பிறப்பிடம், கடலில் கலக்குமிடம், மண்வகைகள், அங்கு விளையும் பயிர்வகைகள், போக்குவரத்து வசதிகள் (நெடுஞ்சாலை, ரயில்வே, விமானவழி, நீர்வழி), துறைமுகங்கள் (இயற்கை துறைமுகம், செயற்கை துறைமுகம் என பிரித்துப் படிக்க வேண்டும்), குன்றுகள், மலைகளின் வரிசைப்படியான அமைப்புகள், சுற்றுலாத்தலங்கள், பருவமழை பொழியும் இடங்கள், மக்கள்தொகை விவரம் என பட்டியலிட வேண்டும். இந்தியா, தமிழ்நாடு, மாவட்ட வாரியாக வரைபடங்களை வீட்டின் சுவரில் மாட்டி தினமும் பார்த்து பயிற்சி பெற வேண்டும்.

மேற்சொன்ன விவரங்களில் தமிழ்நாட்டுக்கு மட்டும் குறிப்பாக படித்து குறிப்பெடுத்துக்கொள்வது முக்கியம். தமிழ்நாட்டில் கரும்பு, நெல், பருத்தி, பயறு வகைகள் எங்கெங்கு விளைகின்றன? எங்கெங்கு விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன? இயற்கைச் சீற்றங்கள், பேரழிவுகள் பற்றிய விவரம், அவற்றைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ளும் திட்டங்கள், தானே புயல், ஜல்புயல் ஹூத் ஹூத் புயல் போன்ற புயல்கள் எப்போதெல்லாம் ஏற்பட்டன? அவற்றுக்கு எவ்வாறு எந்தெந்த நாடுகள் பெயர் சூட்டுகின்றன? என்பது முதற்கொண்டு தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
மேலும், இந்தியாவில் உள்ள 7 யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சலப்பிரதேசம், நாகலாந்து, மிசோராம், மணிப்பூர், திரிபுரா, சிக்கிம் ஆகியவற்றின் பூகோளநிலை, ஆட்சிமுறை, மக்களின் வாழ்க்கை, பண்பாடு, மொழி, கலை போன்றவை குறித்து விளக்கமாக தெரிந்துகொண்டு குறிப்பெடுத்துப் படித்தால் புவியியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெறலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget