சாம்சங் ஜி 360 எச் காலக்ஸி மொபைல் போன்

அதிக பட்ச விலையாக ரூ.9,700 எனக் குறிக்கப்பட்டு, சாம்சங் நிறுவனம் தன் புதிய சாம்சங் ஜி 360 எச் காலக்ஸி கோர் ப்ரைம் ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. இது ஒரு 4ஜி
எல்.டி.இ. அலைவரிசை மொபைல் ஸ்மார்ட் போன். ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த ஆட்டோ போகஸ் திறன் கொண்ட, 5 எம்.பி. திறனில் இயங்கும் கேமரா பின்புறமாகவும், 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா முன்புறமாகவும் உள்ளன. ஜியோ டேக்கிங், டச் போகஸ், பேஸ் டிடக்ஷன் ஆகிய வசதிகள் இதில் கிடைக்கின்றன.

இதில் இரண்டு மைக்ரோ சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 130.8 X 67.9 X 8.8 மிமீ. எடை 130 கிராம். பார் டைப் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 4.5 அங்குல அளவில் தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் செயல்பாடும் கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன. மல்ட்டிமீடியா பிரிவில், எம்.பி.3, எம்.பி.4, எச்.263 ஆகிய பிளேயர்கள் தரப்பட்டுள்ளன. டாகுமெண்ட் வியூவர் புரோகிராம் இயங்குகிறது.

ராம் மெமரி 1 ஜி.பி. ஆகவும், ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. ஆகவும் உள்ளன. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம், இதன் ஸ்டோரேஜ் மெமரியை 64 ஜி.பி. வரை உயர்த்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, 4ஜி, வை பி, ஹாட் ஸ்பாட் ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. அண்மைக் கள தகவல் தொடர்பு வசதியான என்.எப்.சி. தரப்பட்டுள்ளது. இதன் லித்தியம் அயன் பேட்டரி 2,000 mAh திறன் கொண்டதாக உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 9.700.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget