சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் 58வது படத்தின முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உருவாக்கப்பட்ட அரண்மனை
செட்டில் நடந்து முடிந்துவிட்டது. அதையடுத்து, இப்போது மைசூரில் ரஜினியின் லிங்கா படப்பிடிப்பு நடந்த பகுதியில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கப்படுகிறது.
இந்தநிலையில், விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு மாரீசன் என்று தலைப்பு வைத்திருப்பதாக ஆரம்பத்தில் கூறப்பட்டு வந்தது. ஆனால், அதையடுத்து சிம்புதேவனிடம் கேட்கப்பட்டபோது, இன்னும் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை. அதுபற்றிய விவாதம் நடந்து கொண்டிருககிறது. முடிவானதும் முறையாக அறிவிக்கப்படும் என்றார்.
ஆனால், சமீபத்தில் கருடா, போர்வாள் போன்ற டைட்டீல்களையும் பரிசீலனை செய்த அவர்கள், தற்போது புலி என்றொரு தலைப்பினை வைப்பதற்கு முடிவு செய்திருக்கிறார்களாம். புலி என்பதுதான் அந்த கதைக்கு பொருத்தமானதாக இருக்குமாம். அதேசமயம், புலி என்றால் வேறு மாதிரியான சர்ச்சைகள் வெடித்து விடக்கூடாது என்கிற பயமும் அவர்களுக்கு ஏறப்பட்டுள்ளதாம் அதனால், ஒருமனதாக முடிவு செய்யப்பட்ட இந்த புலியும் இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் உள்ளதாம்.

கருத்துரையிடுக