என்னை அறிந்தால் டிரைலர் விமர்சனம்

வரும் பொங்கல் அன்று அஜீத் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி உள்ள, என்னை அறிந்தால் ரிலீசாக இருக்கிறது. அதன் டிரைலர் இன்று (ஜனவரி 1) யூ
டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு பார்வை...

அஜீத்தின் கால்களில் துவங்கும் டிரைலர் அவரது துப்பாக்கி, காப்பு அணிந்த கைகள் காட்டி இளமையான அஜீத் பைக்கில் வருகிற காட்சியுடன் "வா ராஜா வா வா... இதான் உன் டாவா... இனி எல்லோருமே நோவா..." பாடல் பின்னணியில் இசைக்கிறது.

அதன் பிறகு கத்திச் சண்டை, அண்டர் வாட்டர் பாய்ச்சல், சேசிங் ஆக்சிடெண்ட் என்று ஆக்ஷன் காட்சிகள் விரிகிறது. த்ரிஷா மணக்கோலத்தில் ஆடிப்பாடுகிறார். அனுஷ்காவிடம் விமானத்தில் "ஐ எம் சத்யதேவ்" என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். 8 வயதில் அஜீத்திற்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சால்ட் அண் பெப்பர் லுக்கில் அனுஷ்காவுடன் இருக்கிறார். இடையில் ஜெயில் கைதியாகவும் இருக்கிறார்.

துப்பாக்கியை வில்லன்களை நோக்கி திருப்பி "சுட்டேன்னு வச்சுக்க" என்று மிரட்டுகிறார். "இன்னொரு நிமிஷம் இங்க நீ நிண்ண உன் தலையிருக்காது" என்று மற்றொரு காட்சியில் மிரட்டுகிறார். "ஜ சே கெட்அவுட் யார்கிட்ட உன் விளையாட்ட காட்டுற சத்யதேவ்..." என்ற டயலாக்குடன் முடிகிறது ட்ரைலர்.

போலீஸ் அதிகாரியான அஜீத் ஒரு ஆக்ஷன் பிளானில் தன் மனைவி த்ரிஷாவை இழந்து ஜெயிலுக்கும் போகிறார். அவருக்கு இருக்கும் ஒரே மகளுடன் அமைதியான வாழ்க்கையை தேடிச் செல்லும்போது மீண்டும் பழைய எதிரிகள்... அதன் பிறகு அவர்களை எப்படி களை எடுக்கிறார் என்கிற கதை என்பதை கணிக்க முடிகிறது. இளமை அஜீத்துக்கு த்ரிஷாவும், சால்ட் அண்ட் பெப்பர் அஜீத்துக்கு அனுஷ்காவும் ஜோடி.

சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட டீசரில் இருந்த வேகமும், எதிர்பார்ப்பும் இதில் இல்லை. வழக்கமான ஒரு ஆக்ஷன் பட டிரைய்லர் போலத்தான் இருக்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget