வேர்ட் டெக்ஸ்ட்டில் ட்ராப் ஷேடோ செய்வது எப்படி

டெக்ஸ்ட்டில் ட்ராப் ஷேடோ: வேர்ட் டாகுமெண்ட்டில் பாராக்களுக்கு பார்டர் அமைக்கலாம் என்பதனைத் தெரிந்து
வைத்திருப்பீர்கள். இதனுடன் இன்னும் ஒரு படி மேலே சென்று, குறிப்பிட்ட டெக்ஸ்ட்டிற்கு எப்படி ட்ராப் ஷேடோ அமைத்து அழகு படுத்தலாம் எனப் பார்க்கலாம்.

ட்ராப் ஷேடோ (drop shadow) என்பதுவும் ஒருவகை பார்டரே. இது இரண்டு பக்கங்களில், மற்ற இரு பக்கங்களில் இருப்பதைக் காட்டிலும் சற்று அகலமாக இருக்கும். இது அச்சில் வரும்போது, இந்த குறிப்பிட்ட டெக்ஸ்ட் மட்டும் மற்றவற்றிலிருந்து சற்று உயரமாகத் தனியே காட்டப்படும். இதனை எப்படி அமைப்பது?

1. எந்த பாராவில் ட்ராப் ஷேடோவினை இணைக்க வேண்டுமோ, அதில் கர்சரை நிறுத்தவும். 

2. பார்மட் (Format) மெனுவில் இருந்து Borders and Shading என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Borders டேப் திறக்கப்பட்ட நிலையில் Borders and Shading டயலாக் பாக்ஸினைக் காட்டும். 

3. இங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டவை காட்டப்படும் இடது புறமான பட்டியலில் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 

4. தொடர்ந்து Width drop-down பட்டியலில், கோடு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

ஹைபன்: வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை. ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம். இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது. எனவே பிரிக்க முடியாத ஹைபன்கள் இந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும். 

இதற்கு அந்த ஹைபன் அல்லது டேஷ் அமைக்கையில் கண்ட்ரோல் மற்றும் ஷிப்ட் கீகளை ஒரு சேர அழுத்திக் கொண்டு அமைக்க வேண்டும். பிரிக்க முடியாத ஹைபன்களை வேறு ஒரு வகையிலும் அமைக்கலாம். 

1. இன்ஸெர்ட் மெனு சென்று சிம்பல் என்றிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது இன்ஸெர்ட் சிம்பல் டயலாக் பாக்ஸைக் கொடுக்கும். 

2. இந்த சிறிய விண்டோவில் ஸ்பெஷல் கேரக்டர்ஸ் டேப்பில் கிளிக் செய்திடவும். 

3. இதன் பின் நான் பிரேக்கிங் ஹைபன் கேரக்டரை ஹைலைட் செய்திடவும்.

4. பின்னர் இன்ஸெர்ட் என்பதில் கிளிக் செய்திடவும்.

5. அடுத்து கேன்சல் என்பதில் கிளிக் செய்வதன் மூலம் டயலாக் பாக்ஸை மூடவும்.

காப்பி அல்லது மூவ்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, குறிப்பிட்ட டெக்ஸ்ட்டினை கிளிப் போர்டில் வைத்திருப்போம். அதனைப் பல இடங்களில் ஒட்ட வேண்டியதிருக்கும். இது சில வேளைகளில் படமாகக் கூட இருக்கலாம். அப்போது வேறு ஒரு டெக்ஸ்ட்டை எடுத்து இன்னொரு இட்த்தில் ஒட்ட எண்ணும்போது அதனை காப்பி செய்தால், கிளிப் போர்டில் உள்ள டெக்ஸ்ட் அல்லது படம் மறைந்துவிடும். ஆனால், அதனை மீண்டும் காப்பி செய்வது சற்று நேரம் எடுக்கும் செயலாக இருக்கலாம். அப்படிப்பட்ட வேளைகளில், கிளிப் போர்டுக்கு காப்பி செய்திடாமலேயே, டெக்ஸ்ட்டை இன்னொரு இடத்தில் பேஸ்ட் செய்திடும் வழியைக் கடைப்பிடிக்கலாம்.

1. முதலில் வேறு ஒரு இடத்தில் ஒட்ட வேண்டிய டெக்ஸ்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும். 

2. தொடர்ந்து Shift+F2 கீகளை அழுத்தவும். 

3. அடுத்து, கர்சரை, டெக்ஸ்ட்டை எந்த இடத்தில் ஒட்ட வேண்டுமோ, அங்கு கொண்டு சென்று அமைக்கவும். இனி, என்டர் தட்டினால், டெக்ஸ்ட் கர்சர் இருக்கும் இடத்தில் ஒட்டப்படும். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget