நடிகர் : ஹேமந்த்குமார்
நடிகை : சான்யா ஸ்ரீவஸ்தவா
இயக்குனர் : ஜெயகாந்தன் ஆர்
இசை : ராம்ஜி
ஓளிப்பதிவு : வெங்கட்
படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் நாயகன் ஹேமந்த் குமார் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். ஒருநாள் இவரது ஊருக்கு தோழிகளோடு வரும் நாயகி சான்யாவை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார் நாயகன். ஆனால், அவளோ இவரை கண்டுகொள்வதாக இல்லை. ஆற்றில் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் நாயகியை, ஆற்று வெள்ளம் அடித்துச் செல்கிறது. அவளை ஆற்றுக்குள் குதித்து நாயகன் காப்பாற்றுகிறார்.
கரை சேர்ந்ததும் தனது கழுத்தில் இருந்த செயின் காணாமல் போனதை உணரும் நாயகி, நாயகனை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறாள். அவனை திருடன் என்று நினைக்கிறாள். ஆனால், அந்த செயினை நாயகன் கண்டுபிடித்து கொடுத்த பிறகுதான் அவன் நல்லவன்தான் என்பது நாயகிக்கு தெரிகிறது. இதையடுத்து, இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இவர்கள் காதல் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும்வேளையில் ஒருநாள் தன் ஊரில் திருவிழா என்று நாயகனை அங்கு வரவழைக்கிறாள் நாயகி. அங்கு இருவரையும் ஒன்றாக பார்க்கும் நாயகியின் அப்பாவும், தாய்மாமன் கராத்தே ராஜாவும் கொதிப்படைகின்றனர். வீட்டுக்கு திரும்பும் நாயகியிடம் இதுகுறித்து கேட்க, அவள் ஹேமந்த் குமாரை விரும்புவதாகவும், அவனைத்தான் திருமணம் செய்வதாகவும் கூறுகிறாள்.
ஆனால், அவர்களின் காதலை அவளது அப்பாவும், தாய்மாமாவும் ஏற்க மறுக்கின்றனர். ஒருகட்டத்தில் அவளது அப்பா இதற்கு காதலை ஏற்று திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் தாய்மாமா. நாயகியை திருமணம் செய்துகொண்டால் தனக்கு நிறைய சொத்து கிடைக்கும் என்ற ஆசையில் இருந்தவருக்கு, இந்த காதல் விவகாரம் இடைஞ்சல் கொடுக்கிறது.
இதனால், நாயகனை தீர்த்துக்கட்டிவிட்டு, நாயகியை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். இதற்கிடையில் திருமணத்திற்கு 15 நாட்கள் இருக்கும் நிலையில், நாயகன் வேலை தேடி சென்னை புறப்படுகிறான். செல்லும்போது அவனை அடியாட்களை வைத்து அடித்து ரெயில் தண்டவாளத்தில் போட்டுவிடுகிறார் மாமா. அந்த வழியாக செல்லும் சில திருநங்கைகள், அடிபட்டு கிடக்கும் நாயகனை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்கள்.
அங்கு, நாயகனுக்கு சிகிச்சை கொடுக்கும் டாக்டர், அவன் சுயநினைவை இழந்துவிட்டதாகவும், அவனுக்கு தெரிந்தவர்களை பார்த்தால் அவனுக்கு சுயநினைவு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் கூறி அனுப்புகிறார். சுயநினைவு இழந்த நாயகனை திருநங்கைகள் தங்களது இருப்பிடத்துக்கு கொண்டு வருகின்றனர்.
இறுதியில் நாயகன் சுயநினைவு திரும்பி நாயகியை கரம்பிடித்தாரா? அல்லது, நாயகிக்கும் அவளது மாமனுக்கும் திருமணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை.
நாயகன் ஹேமந்த்குமார் இருவேரு கெட்-அப்களில் கலக்குகிறார். திருநங்கை வேடத்தில் அசல் திருநங்கை போலவே தோற்றம் தருகிறார். சண்டைக்காட்சிகளிலும் ஆக்ரோஷத்துடன் நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில்தான் ரொமான்ஸ் செய்ய கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்கிறார்.
நாயகி சான்யாவுக்கு நாயகிக்குண்டான தோரணை இல்லை. ஏதோ, துணை நடிகை போன்று இருக்கிறார். படத்தில் இவரது நடிப்பு சுமார்தான். இவரது கவர்ச்சியில் நாயகன் மட்டுமே மயங்குகிறார். பாவாடை தாவணியில் பார்க்க சற்று அழகாக தெரிகிறார். நாயகியின் அப்பாவாக வரும் ‘பசங்க’ சிவகுமார் தனது எதார்த்தமான நடிப்பால் கவர்கிறார். வில்லன் மாமாவாக வரும் கராத்தே ராஜா பார்வையாலேயே மிரட்டுகிறார். சில இடங்களில் இவரது வில்லத்தனம் எடுபடவில்லை.
படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் ஜெயக்காந்தன், ஒரு காதல் கதையில் எதற்காக திருநங்கைகளை உட்புகுத்தினார் என்பதுதான் நமது முதல் கேள்வி. தனது காதலிக்கும், சொந்தத்துக்கும் உண்மையை சொல்ல நாயகன் எதற்காக திருநங்கை வேடத்திலேயே சென்று அதை சொல்ல முயற்சிக்க வேண்டும். சஸ்பென்ஸ், சஸ்பென்ஸ் என்று லாஜிக் மீறலான காட்சிகளையே வைத்து நம்மை வெறுப்படைய வைத்திருக்கிறார்.
ஏ.கே.ராம்ஜி இசையில் பாடல்கள் பரவாயில்லை. மாஸ்டர் ஜான் பாபு ஆடிப்பாடும் குத்தாட்ட பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை சுமார் ரகம்தான். வெங்கட் ஒளிப்பதிவும் சுமார் ரகம்தான்.
மொத்தத்தில் விருதாலம்பட்டு ரசிகர்களுக்கு விருந்தாகவில்லை.

கருத்துரையிடுக