நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
ஏற்கனவே சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த சினிமா பட விழாவில் நடிகை குஷ்பு பங்கேற்ற போது மேடையில் வைத்திருந்த அம்மன் சிலை முன் இருக்கையில் செருப்பு அணிந்தபடி கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தார். இதற்கு பெரிய எதிர்ப்புகள் கிளம்பின. இந்து அமைப்புகள் குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்தன. குஷ்பு அப்போது வருத்தம் தெரிவித்தார். அதன்பிறகு அப்பிரச்சினை அடங்கியது.
அதன்பிறகு திருமணத்துக்கு முந்தைய ‘செக்ஸ்’ பற்றி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு சிக்கலில் மாட்டினார். பெண்கள் அமைப்புகள் நாடு முழுவதும் குஷ்புவை கண்டித்து போராட்டங்கள் நடத்தின. கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டது.
கடந்த வருடம் ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழாவில் கிருஷ்ணர், ஆஞ்சநேயர் போன்ற இந்துக் கடவுள்கள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து கலந்து கொண்டார். இதற்கும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் தான் இப்போது ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து சர்ச்சையில் மாட்டி உள்ளார்.
குஷ்பு மீது கும்பகோணம் கோர்ட்டில் இந்து மக்கள் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. ருத்ராட்ச மாலையில் குஷ்பு தாலி அணிந்து இருப்பது இந்து மதத்திற்கு எதிரானது. இந்துக்கள் மனதை புண்படுத்தக் கூடியது என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
குஷ்புவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தவும் இந்து அமைப்புகள் தயாராகி வருகின்றன.

கருத்துரையிடுக