தமிழில் 'ஐ' படம் எந்த அளவிற்கு வியாபாரத்தில் சாதனை ஏற்படுத்தும் என்பது இன்னும் ஒரு சில நாட்களில்தான் தெரிய வரும். ஆனால், ஆந்திரா,
தெலுங்கானா மாநிலங்களில் 'ஐ' படத்தின் வியாபாரம் இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படமும் செய்யாத சாதனை என்று சொல்கிறார்கள். இதுவரை மொத்தமாக 40 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாம். இந்தப் படத்தின் தெலுங்கு உரிமை சுமார் 35 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாம். வெளியீட்டிற்கு முந்தைய வியாபாரத்தில் மட்டும் தற்போது 5 கோடி ரூபாய் அளவில் லாபம் கிடைத்துள்ளதாம். இது வெறும் திரையரங்குகளுக்கு விற்கப்பட்ட வியாபாரம் மட்டும்தானாம். இன்னும் படத்தின் தொலைக்காட்சி உரிமை இதில் சேர்க்கப்படவில்லை.
ரஜினிகாந்த் படம்தான் இதுவரை தெலுங்கில் அதிக அளவிற்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியில் தெலுங்கில் வெளியான 'ரோபோ' திரைப்படம் மொத்தமாக சுமார் 38 கோடி ரூபாய் வசூல் செய்த்தாம். தற்போது முதல் முறையாக ரஜினிகாந்த் இல்லாத ஒரு படத்திற்கு இந்த அளவிற்கு வியாபாரம் நடைபெற்றுள்ளது ஆச்சரியப்பட வைத்துள்ளதாம்.
அதிகபட்சமாக ஆந்திராவின் விசாகப்பட்டிணம் ஏரியாவிற்கு 7 கோடி ரூபாய்க்கும், தெலுங்கானாவின் சீடட் ஏரியாவிற்கு 7 கோடி ரூபாய் அளவிலும் விற்கப்பட்டுள்ளதாம். 'ஐ' பொங்கலுக்கு வரும் அதே சமயத்தில் தெலுங்கு நேரடிப்படமான பவன் கல்யாண், வெங்கடேஷ் நடித்த 'கோபாலா கோபாலா' படமும் வெளிவந்தாலும் 'ஐ' படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு இருக்கும் என வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் நினைக்கிறார்களாம். அப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்து 40 கோடிக்கும் மேல் படத்திற்கு வசூல் கிடைத்தால் தெலுங்கில் ஒரு டப்பிங் படத்திற்கு கிடைத்த மிகப் பெரும் சாதனையாக அது பேசப்படும்.

கருத்துரையிடுக