கேரளாவின் சென்சேஷனல் செலிபிரிட்டியாக இருப்பவர் சரிதா நாயர். சோலார் பேனல் மோசடி வழக்கில் அந்த மாநில முதல்வர் வரை இழுத்து
நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருப்பவர். கேரள அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும், மீடியாக்களுக்கு செய்தி சுரங்கமாகவும் இருப்பவர். சமீபத்தில் இவரது ஆபாச படங்கள் வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கம்போல அந்தப் படத்தில் இருப்பது நான் அல்ல என்று மழுப்பாமல் அதை ஒரு போலீஸ் அதிகாரிதான் வெளியிட்டார் என்று அடுத்த பரபரப்பை அள்ளிப்போட்டார்.
இப்போது சரிதா நாயர் நடித்துள்ள குறும்படம்தான் யூடியூப்பில் வைரலாகி உள்ளது. ஹெல்ப்பாரன்றே பாரியா என்பது அந்த குறும்படத்தின் டைட்டில் அதாவது வளைகுடா நாட்டில் வேலை செய்பவனின் மனைவி என்பது அதன் பொருள்.
கணவன் வெளிநாட்டில் இருக்கும்போது தனிமையில் வசிக்கும் ஒரு மலையாளப்பெண் சந்திக்கும் பிரச்சினைகளை சொல்லும் 15 நிமிட குறும்படம் அது. ஹரீஷ் சந்திரன் கதை, திரைக்கதை எழுதி உள்ளார். ஜோஷி மேடயில் இயக்கி உள்ளார்.
"பெரும்பாலான மலையாள பெண்கள் சந்திக்கும் பிரச்சினை பற்றிய படம் என்பதால் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தேன். இந்தப் படம் பெண்களுக்கு நிச்சயம் விழிப்புணர்வை கொடுக்கும். பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தும்" என்கிறார் சரிதா நாயர்.

கருத்துரையிடுக