'ஐ' படம் வெளிவருவதற்கு முன்பே அந்தப் படம் எவ்வளவு வசூலிக்கும் என பலர் ஜோதிடம் சொல்ல ஆரம்பித்து விட்டனர். கடந்த ஆண்டில் வெளிவந்து
வசூலில் சாதனை புரிந்ததாகச் சொல்லப்படும் 'கத்தி, லிங்கா' ஆகிய படங்களின் வசூலை 'ஐ' முறியடிக்குமா என்பதே அனைவரது கேள்வியாக இருந்தது.
'லிங்கா' படத்தைப் பற்றிய சரியான முதல் நாள் வசூல் தகவலோ, அதற்குப் பிந்தைய தகவலோ இதுவரை வெளியாகவில்லை. படத்திற்கு நஷ்டம் என்றுதான் அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். முதல் மூன்று நாளில் அந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதெல்லாம் பொய்யாக பரப்பி விடப்பட்ட தகவல்தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
'கத்தி' படம் தமிழகம் முழுவதும் முதல் நாள் வசூலில் 12.5 கோடி ரூபாய் வசூலித்ததாக சொல்லப்பட்டது. ஆனால், 'ஐ' படம் அதை விட இரு மடங்கு வசூலைப் பெற்றிருக்கும் என்று சொல்கிறார்கள். உலகம் முழுவதும் கணக்கிட்டாலே இந்த பொங்கல் விடுமுறையில் மட்டும் 'ஐ' படம் 100 கோடி ரூபாயை எளிதாகத் தாண்டி விடும் என்றுதான் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் அல்லாத ஒரு நடிகர் நடித்த படம் என்று இந்தப் படத்தைக் குறிப்பிட முடியாது, படத்தின் இயக்குனரான ஷங்கருக்காகத்தான் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது என்றும் சொல்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் 'எந்திரன்' படத்தை மிஞ்சும் அளவிற்கு 'ஐ' படம் வசூல் ஆகும் என்பதுதான் பலருடைய கணிப்பாக உள்ளது.

கருத்துரையிடுக